ஷாதரா மாநகராட்சி அலுவலகத்தில் தீ விபத்து

தில்லியின் ஷாதராவில் உள்ள தில்லி மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

Published On :10 ஜூலை 2026, 1:03 am IST

தில்லியின் ஷாதராவில் உள்ள தில்லி மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை பிற்பகலில் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அந்த அதிகாரி கூறியதாவது: பிற்பகல் 2.46 மணிக்கு தீ விபத்து குறித்த தகவல் கிடைத்தது. ஆறு தீயணைப்பு வாகனங்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இச்சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ அணைக்கப்பட்டது. ஏ.சி. சாதனத்தில் ஏற்பட்ட தீ விபத்து உடனடியாக அணைக்கப்பட்டது. தீயணைப்புப் படையினா் சம்பவ இடத்தில் உள்ளனா். இது குறித்து காவல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றாா் அந்த அதிகாரி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.