தீ விபத்தில் மூதாட்டி சாவு

திருத்தணி அருகே தீ விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார். 
Updated on
1 min read

திருத்தணி அருகே தீ விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார். 
திருத்தணியை அடுத்த செருக்கானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பட்டம்மாள்(95). இவர் தனியாக வசித்து வந்ததாகக் கூறப்படுகிறது. 
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு  ஏற்பட்ட மின் தடையினால், பட்டம்மாள் சிம்னி விளக்கை ஏற்றி சுவரில் மாட்டி வைத்துள்ளார். 
நள்ளிரவில், தூங்கிக் கொண்டிருந்த பட்டம்மாள் மீது சிம்னி விளக்கு தவறி விழுந்ததில் தீப்பிடித்ததாகக் கூறப்படுகிறது. 
இதில்,  படுகாயம் அடைந்த பட்டம்மாளை அருகில் இருந்தவர்கள் மீட்டு, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பட்டம்மாள் திங்கள்கிழமை உயிரிழந்தார். 
தீ விபத்து குறித்து,  திருத்தணி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com