இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மாவுக்கு ஆதரவாக தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.
ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அண்மையில் நிறைவடைந்தது. இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் அதிரடியில் மிரட்டுவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா, தொடரின் முதல் மூன்று போட்டிகளில் தொடர்ச்சியாக டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். சூப்பர் 8 சுற்றில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசிய அபிஷேக் சர்மா, நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் அதிவேகமாக அரைசதம் விளாசி அசத்தினார்.
இந்த நிலையில், டி20 உலகக் கோப்பைத் தொடரின் தொடக்கத்தில் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அபிஷேக் சர்மாவுக்கு ஆதரவாக இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பேசியுள்ளார்.
இது தொடர்பாக ஜியோஹாட்ஸ்டாரில் அவர் பேசியதாவது: கடந்த 2014 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின்போது, அபிஷேக் சர்மாவைக் காட்டிலும் மிகவும் மோசமான அனுபவம் எனக்கு கிடைத்தது. தொடர்ச்சியாக நான்கு போட்டிகளில் டக் அவுட் ஆனேன். ரன்கள் குவிக்கவில்லையென்றால், அனைவரும் ஃபார்ம் குறித்து விமர்சிக்கத் தொடங்கி விடுவார்கள் என அபிஷேக் சர்மாவிடம் கூறினேன். ஆனால், அபிஷேக் சர்மா ஃபார்மில் இருக்கிறார், அவருடைய பேட்டிலிருந்து ரன்கள்தான் வரவில்லை.
வீரர் ஒருவரின் ஃபார்மை தீர்மானிக்க அவர் 20-லிருந்து 30 பந்துகளை எதிர்கொண்டு விளையாடியிருக்க வேண்டும். ஆனால், அபிஷேக் சர்மா முழுமையாக 20 பந்துகளைக் கூட சந்திக்கவில்லை. அபிஷேக் சர்மாவுக்கு நான் கூறுவது ஒன்றே ஒன்றுதான். அடுத்தப் போட்டியில் விளையாடும்போது, முன்பு இல்லாத அளவில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துங்கள் என்று கூறுவேன்.
உங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள், இந்த உலகம் என்ன நினைக்கிறது என்பது குறித்து கவலைப் படாதீர்கள். ஆட்டத்தின் முதல் பந்தை சிக்ஸருக்கு விளாச வேண்டும் என விரும்பினால், 100 சதவிகிதம் அந்த முடிவை செயல்படுத்துங்கள். உலகம் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறது என்பதைக் காட்டிலும், இந்திய அணி வீரர்கள் மற்றும் அணி நிர்வாகம் உங்களைப் பற்றி என்ன நினைக்கிறது என்பதே முக்கியம் என்றார்.
Summary
Head coach Gautam Gambhir has spoken out in support of Indian opener Abhishek Sharma.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சன்ரைசர்ஸ் அணியின் துணை கேப்டன் அபிஷேக் சர்மாவுக்கு 25% அபராதம்!

சஞ்சு சாம்சனின் திறமை மீது ஒருபோதும் எந்தவொரு சந்தேகமும் இல்லை: கௌதம் கம்பீர்

டி20 உலகக் கோப்பை! கம்பீர், பும்ராவை பாராட்டிய தோனி!

ரன்கள் குவிப்பதில் தடுமாற்றம்; இறுதிப்போட்டியில் அபிஷேக் சர்மா விளையாடுவாரா?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு



