மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இன்று (ஜூன் 8) இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மோதின.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்தியத் தீவுகள் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்ய, இந்திய அணி முதலில் விளையாடியது.
முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக பார்தி ஃபுல்மாலி 40 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கும். அவரைத் தொடர்ந்து, ஸ்மிருதி மந்தனா 39 ரன்கள், யஷ்திகா பாட்டியா 36 ரன்கள், ஷஃபாலி வர்மா 29 ரன்கள் எடுத்தனர்.
மேற்கிந்தியத் தீவுகள் தரப்பில் எஃபி பிளெட்ச்சர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். கரிஷ்மா, ஆலியா மற்றும் டீண்ட்ரா டாட்டின் தலா ஒரு விக்கெட்டினைக் கைப்பற்றினர்.
ஷ்ரேயங்கா பாட்டில், ராதா யாதவ் அசத்தல்; இந்தியா வெற்றி!
180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம், 26 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
மேற்கிந்தியத் தீவுகள் அணியில் அதிகபட்சமாக டீண்ட்ரா டாட்டின் 44 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார். அதில் 8 பவுண்டரிகள் அடங்கும். ஷிமைன் கேம்பெல் 25 ரன்கள், ஜெனிலா கிளாஸ்கோ மற்றும் ஷானிஷா ஹெக்டார் தலா 19 ரன்கள் எடுத்தனர்.
இந்தியா தரப்பில் ஸ்ரேயங்கா பாட்டில் 4 விக்கெட்டுகளையும், ராதா யாதவ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
Summary
The Indian team won the T20 World Cup warm-up match against the West Indies by 26 runs.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எபோலா அச்சம்: காங்கோவின் உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தை ரத்து செய்த ஸ்பெயின்!
பிஃபா உலகக்கோப்பை! கத்தார் அணியில் விளையாடும் 19 வயதான கேரள வம்சாவளி வீரர்!

உலகக் கோப்பையில் இந்த தவறை மீண்டும் செய்யமாட்டோம்: ஸ்மிருதி மந்தனா

கால்பந்து உலகக் கோப்பை: மெஸ்ஸி தலைமையிலான ஆர்ஜென்டீன அணி!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP




