டி20 உலகக் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்து இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது.
ஐசிசி மகளிர் டி20 உலகக் கோப்பைத் தொடரில் லார்ட்ஸ் திடலில் நடைபெற்ற இன்றையப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வு செய்து முதலில் விளையாடியது.
ஹர்மன்பிரீத் கௌர் அரைசதம்!
டாஸ் வென்று முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 170 ரன்கள் எடுத்தது.
இந்திய அணியில் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா மற்றும் ஷஃபாலி வர்மா அணிக்கு சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இந்த இணை முதல் விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்தது. ஷஃபாலி வர்மா 26 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 3 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கும். ஸ்மிருதி மந்தனா 38 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.
இதனையடுத்து, ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் ஜோடி சேர்ந்தனர். இந்த இணை நன்றாக விளையாடி ரன்கள் சேர்த்தது. சிறப்பாக விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34 ரன்களில் ரிட்டையர்டு அவுட் ஆனார். அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் அரைசதம் கடந்து அசத்தினார். அவர் 27 பந்துகளில் 56 ரன்கள் எடுத்தார். அதில் 6 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
ஆஸ்திரேலியா தரப்பில் கேப்டன் சோஃபி மோலினக்ஸ் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
வெளியேறியது இந்தியா; அரையிறுதியில் தென்னாப்பிரிக்கா!
171 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி, 19 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக எல்லிஸ் பெரி 56 ரன்களும், ஆஷ்லே கார்டனர் 53* ரன்களும் எடுத்தனர். போஃப் லிட்ச்ஃபீல்டு 24 ரன்கள், பெத் மூனி 22 ரன்கள் எடுத்தனர்.
இந்தியா தரப்பில் ஸ்ரீ சரணி இரண்டு விக்கெட்டுகளையும், தீப்தி சர்மா மற்றும் ரேணுகா சிங் தாக்குர் தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வாழ்வா சாவா போட்டியில் தோல்வியடைந்ததால், இந்திய அணி டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து வெளியேறியது. தென்னாப்பிரிக்க அணி அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
குரூப் ஏ பிரிவிலிருந்து ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளும், குரூப் பி பிரிவிலிருந்து இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளும் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Summary
The Indian team lost the match against Australia in the T20 World Cup tournament and missed the opportunity to advance to the semi-finals.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











