தேர்வுக்கு அஞ்சாமல் வெற்றி காணுங்கள்: முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டே
மாதவரம் அருகே நடைபெற்ற கல்வி வழிக்காட்டி நிகழ்ச்சியில், மாணவர்கள் தேர்வுக்கு அஞ்சாமல் வெற்றி காணவேண்டும் என முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டே பேசினார்.


மாதவரம் அருகே நடைபெற்ற கல்வி வழிக்காட்டி நிகழ்ச்சியில், மாணவர்கள் தேர்வுக்கு அஞ்சாமல் வெற்றி காணவேண்டும் என முன்னாள் அமைச்சர் எச்.வி. ஹண்டே பேசினார்.
மாதவரத்தை அடுத்த கொளத்தூர் வி.வி.நகர் 2ஆவது தெருவில் உள்ளது குலப்பாடி டாக்டர் எஸ்.பாலகிருஷ்ண ஜோஷி குருகுலம் மெட்ரிக். பள்ளி. இங்கு பயிலும் மாணவ-மாணவிகள் தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளவும், மேற்படிப்புக்கான ஆலோசனைகளைப் பெறவும் கல்வி வழிக்காட்டி நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு, பள்ளி முதல்வர் மீனாகுமாரி தலைமை வகித்தார். ஏ.எம்.என். குளோபல் நிறுவனத் தலைவர் இராமநாராயணன் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இதில் கலந்து கொண்டு முன்னாள் அமைச்சர் ஹண்டே பேசியது: மாணவ, மாணவிகள் தேர்வுகளை சந்திக்க அஞ்ச வேண்டாம். மாறாக பாடங்களை தினசரி படித்து சந்தேகங்களை நிவர்த்தி செய்யுங்கள். அப்போதுதான் படித்த பாடங்கள் மனதில் இருக்கும். இதனால், தேர்வை எளிதாக சந்திக்க முடியும்.
அதேபோல், பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் எதிர்காலத்தில் எதுவாக விரும்புகிறீர்களோ அதற்கான துறையில் மேற்படிப்பை தேர்வு செய்யுங்கள். அதில் முழு ஆர்வத்துடன் மனதை செலுத்துங்கள். அப்போதுதான் அத்துறையில் சிறந்து விளங்க முடியும் என்றார்.
நிகழ்ச்சியில் வரதராஜன், அரிமாசங்க ஆளுநர் பிரித்விகுமார், டி.ஜெ.எஸ்.கல்லூரி முதல்வர் பழனிசாமி ஆகியோர் கலந்துகொண்டனர். இதில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து 25 க்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...