பசுமைக் குடில் திட்டத்தால் பொதுமக்கள் அவதி
ஆவடி அருகே, குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள பசுமைக் குடிலில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் காரணமாக சுகாதாரக்கேடுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.


ஆவடி அருகே, குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைக்கப்பட்டுள்ள பசுமைக் குடிலில் இருந்து வெளியேறும் துர்நாற்றம் காரணமாக சுகாதாரக்கேடுகள் ஏற்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து ஆவடி நகராட்சிக்கு உள்பட்ட 16-ஆவது வார்டு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திங்கள்கிழமை ஆட்சியரிடம் நேரில் அளித்த மனுவில் தெரிவித்
திருப்பதாவது:
இங்குள்ள வீட்டு வசதி வாரியக் குடியிருப்புகளைச் சுற்றிலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்நிலையில், இக்குடியிருப்பு வளாகத்தின் மத்தியில் பசுமைக் குடில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த பசுமைக் குடிலில், மக்கும் குப்பைகளில் உரம் தயாரிக்கும் குழிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழிகளில் ஈ மொய்க்காமல் இருப்பதற்காக ரசாயன திரவம் தெளிக்கப்படுகிறது. இதிலிருந்து வெளியேறும் துர்நாற்றம் காரணமாக பல்வேறு தொற்று நோய்கள் ஏற்படுகின்றன. மேலும், அருகில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் கண் எரிச்சல், தொண்டை வலி, மர்மக் காய்ச்சல் போன்றவைகளால் அடிக்கடி பாதிக்கப்படுகின்றனர்.
ஏற்கெனவே, பசுமைக் குடில் திட்டத்தை இப்பகுதியில் செயல்படுத்தக்கூடாது என குடியிருப்போர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதை மீறி ரூ.40 லட்சம் மதிப்பில் பசுமைக் குடிலை அமைத்துள்ளதாக கூறுகின்றனர்.
ஆனால், பொதுமக்களை சுகாதாரக் கேட்டிலிருந்து காப்பாற்றும் வகையில், இந்த பசுமைக் குடிலை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், குடும்ப அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றை அரசிடம் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் ஆட்சியரிடம் அளித்த மனுவில் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...