தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மண் குவாரியை மூட வேண்டும்: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கும்மிடிப்பூண்டி அருகே விதிமுறைகளை மீறிச் செயல்படும்  மண் குவாரியை மூட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புதன்கிழமை  குவாரியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 1:55 am

DIN

கும்மிடிப்பூண்டி அருகே விதிமுறைகளை மீறிச் செயல்படும்  மண் குவாரியை மூட வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் புதன்கிழமை  குவாரியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
செங்கரை பகுதியில் சவுடு மண் குவாரி கடந்த மாதம் முதல் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இங்கு சவுடு மண் எடுப்பதாக உரிமம் பெற்றுவிட்டு, முறைகேடாக  கிராவல் மண் எடுப்பதாக கூறி அப்பகுதி மக்கள் இதுவரை 5 முறை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். 
மேலும் இந்த குவாரியில் அனுமதி பெறாத இடங்களில் எல்லாம் மண் எடுப்பதாகவும் 
கூறப்படுகிறது. 
இந்நிலையில், குவாரியின் முறைகேடுகள் குறித்து பொதுமக்கள் அளிக்கும் புகார்களுக்கு வருவாய்த் துறையினரும், கனிம வளத்துறையினரும், போலீஸாரும் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று கூறி விடுதலைச் சிறுத்தைகள்  கட்சியினர் புதன்கிழமை குவாரியை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நிகழ்விடத்திற்கு வந்த ஊத்துக்கோட்டை போலீஸார் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, குவாரியில் 48 நாள்களில் 5,000 லோடு மண் எடுக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்ற நிலையில் கடந்த ஒரு மாத காலமாக நாள் ஒன்றுக்கு 300 லாரிகளில் 9,000 முதல் 10,000 லோடு வரை மண் எடுப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் போலீஸாரிடம்  குற்றம் சாட்டினர்.
தொடர்ந்து, இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.