வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

திருவள்ளூர் அருகே குப்பைகள் அகற்றாததால் துர்நாற்றம்: பொதுமக்கள் அவதி

திருவள்ளூர் அருகே குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் ஏற்படுவதுடன் சுகாதாரக்கேடு அபாயம் இருப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

News image
 காக்களூர்  ஊராட்சிக்குள்பட்ட ம. பொ. சி.  நகரில் கொட்டப்பட்டுள்ள  குப்பைகள்.
Updated On :5 ஜூன் 2018, 9:15 pm

DIN

திருவள்ளூர் அருகே குவிந்து கிடக்கும் குப்பைகளால் துர்நாற்றம் ஏற்படுவதுடன் சுகாதாரக்கேடு அபாயம் இருப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 
திருவள்ளூர் அருகே காக்களூர் ஊராட்சியைச் சேர்ந்த ம.பொ.சி. நகரில் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் பல்வேறு தெருக்களில் இருந்து இப்பகுதி சாலையோரங்களில் காய்கறிகள், உணவுப் பொட்டலங்களுக்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை கொட்டிச் செல்கின்றனர். 
தற்போது ஊராட்சிப் பணியாளர்கள் முறையாக அகற்றாமல் அப்படியே விட்டு விடுவதால் குப்பைகள் சாலையோரம் குவிந்து கிடக்கின்றன. தற்போது, குப்பைகள் அழுகிய நிலையில் துர்நாற்றமும் ஏற்படுகிறது. 
அதனால், இவ்வழியாக பொதுமக்கள் மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவ, மாணவிகள் ஆகியோர் நடந்து செல்ல முடியாமல் சிரமத்துக்குள்ளாகின்றனர். அதனால், ஊராட்சி துப்புரவுப் பணியாளர்கள் சாலையோரம் குவிந்து கிடக்கும் குப்பைகளை நாள்தோறும் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.