கோயில் திருவிழாவுக்காக தீச்சட்டிகள் தயாரிக்கும் பணி மும்முரம்

திருவள்ளூர் அருகே கோயில் திருவிழாக்களுக்கு பயன்படுத்தும் பூச்சட்டிகள் (தீச்சட்டிகள்) தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 
பூச்சட்டி தயாரிக்கும்  தொழிலாளி  ரவி.
பூச்சட்டி தயாரிக்கும்  தொழிலாளி  ரவி.

திருவள்ளூர் அருகே கோயில் திருவிழாக்களுக்கு பயன்படுத்தும் பூச்சட்டிகள் (தீச்சட்டிகள்) தயார் செய்யும் பணியில் தொழிலாளர்கள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 
திருவள்ளூர் அருகே கிளாம்பாக்கம் கிராமத்தில் மண்பானை, திருவிழாவிற்கான பூச்சட்டிகள் தயார் செய்யும் பணியில் பல குடும்பங்கள் ஈடுபட்டு வருகின்றனர். 
இதுவரையில் கோடைக் காலத்திற்கான குடிநீர்ப் பானைகள், குழம்புச் சட்டிகள், தண்ணீர் சக்குகள் உள்ளிட்டவற்றைத் தயாரித்து வந்தனர். தற்போது முதல் அடுத்து வரும் இரு மாதங்களுக்கு கிராமங்களில் உள்ள கோயில்களில் திருவிழா மற்றும் கூழ் ஊற்றும் நிகழ்வுகள் நடைபெற உள்ளன. 
இதேபோல், பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் திருவிழா, மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் பக்தர்கள் நேர்ச்சை செலுத்தும் வகையில் தீச்சட்டிகள் எடுப்பது வழக்கமாகும். இதற்காக கிராமங்களில் மண்பானை தயார் செய்யும் தொழிலாளர்களிடம் முன்கூட்டியே தயாரிக்குமாறு கூறுவார்கள். எனவே பக்தர்கள் விரும்பும் வகையில் தீச்சட்டிகள் மற்றும் ஆக்கிப் படைத்தலுக்கான மண்பானைகள் போன்றவற்றை தொழிலாளர்கள் தயார் செய்து வருகின்றனர். 
இதில், தீச்சட்டிகள் தயார் செய்வது என்பது கடினமான பணியாகும். 
அதனால் பக்தர்கள் விரும்பும் வகையிலும் அமைக்க வேண்டியிருப்பதால், கவனமாக ஈடுபட வேண்டியுள்ளது. இதில், தீச்சட்டிகள் கடைசல் பிடிப்பது முதல், அடிப்பாகம் சரி செய்யும் வரையில் வேலைப்பாடு அதிகமாகும். அதைத் தொடர்ந்து வெயிலில் காயவைத்த பின்னர் வைக்கோலில் வைத்து சுட வேண்டும். அப்போது, ஒரு சில பூச்சட்டிகள் உடைந்து சேதமடையும் என்பதால் நாள்தோறும் 50 பூச்சட்டிகள் வரை தயார் செய்ய முடியும் என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். 
இது குறித்து இத்தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளி ரவி(61) கூறியது:
எனக்கு விவரம் தெரிந்த 15 வயது முதலே இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறேன். ஒரு காலத்தில் மண்பானைகள் தயாரிப்பதற்கான மண்ணை ஏரிகளில் இருந்து எடுத்துக் கொள்ள அனுமதியிருந்தது. தற்போது ஒரு மாட்டு வண்டி செம்மண் அல்லது ஏரி மண் ரூ.1500 விலை கொடுத்து வாங்க வேண்டியுள்ளது.
இதில் ஒரு வண்டி மண் இருந்தால் 20 நாள்களுக்கு வேலை செய்யலாம். இந்த பூச்சட்டிகளை தயாரித்து தலா ரூ.20 முதல் ரூ.25 வரை மொத்தமாக விற்பனைக்கு அனுப்புகிறோம். 
இதில், தனியாக முன்கூட்டியே தெரிவித்த பக்தர்கள் பூச்சட்டிகளில் வர்ணம் பூசுதல் ஆகிய பணிகளை பார்த்து தானாகவே முன்வந்து ரூ.5 வரையில் கூடுதலாகவே அளிப்பார்கள்.
இதன் மூலம் ஒவ்வொரு நாளும் தொழிலாளி ஒருவருக்கு தலா ரூ.500 வரையில் கூலி கிடைக்கும். இதேபோல், திருவிழாக் கால பூச்சட்டிகள் தயார் செய்யும் பணியில் ஈடுபடும் போது மட்டும் ரூ.750 வரையில் கிடைக்கிறது என அவர் தெரிவித்தார்.

* பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் திருவிழா, மாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற இருக்கிறது. 
இவ்விழாவில் பக்தர்கள் நேர்ச்சை செலுத்தும் வகையில் தீச்சட்டிகள் எடுப்பது வழக்கமாகும். 
இதற்காக கிராமங்களில் மண்பானை தயார் செய்யும் தொழிலாளர்களிடம் முன்கூட்டியே தயாரிக்குமாறு கூறுவார்கள். எனவே பக்தர்கள் விரும்பும் வகையில் தீச்சட்டிகள் மற்றும் ஆக்கிப் படைத்தலுக்கான மண்பானைகள் போன்றவற்றை தொழிலாளர்கள் தயார் செய்து வருகின்றனர். *

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com