ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வு நிகழ்வை இரவு நேரங்களில் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டம், அம்பத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் செளத்ரி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட இணைச்செயலாளர் ராஜு வரவேற்புரை வழங்கினார். இந்தக் கூட்டத்தில் மாநில சிறப்புத் தலைவர் டி.சுப்பிரமணியன், மாநிலத் தலைவர் மகேந்திரன், மாநிலச் செயலாளர் நரசிம்மன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.
இதில், ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வை இரவு நேரங்களில் நடத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிகழ்வில் மாவட்ட, வட்டப் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். சி.குமார் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாட்ஸ்ஆப் சேனல் பதிவுகளை பார்ப்பது எத்தனை பேர்? அறிவது எப்படி? பயன்கள் என்னென்ன?

விம்கோ நகர் - மாதவரம் மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் புதிய தடம்!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 19 மாவட்டங்களில் மழை!
ஹோர்முஸ் தொடர்பாக ஈரான் - ஓமன் பேச்சுவார்த்தை! அமெரிக்கா புறக்கணிப்பு!
விடியோக்கள்

தலைமைச் செயலகம் இடமாற்றம் எப்போது?| Tamil Nadu Secretariat | Fort St. George |TN Assembly | TVK Government | CM Vijay


