எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பிளஸ் 2 தேர்வு: மாவட்டத்தில் 43,679 பேர் எழுதினர்

திருவள்ளூர் மாவட்டத்தில், பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வில் மாணவ, மாணவிகள் 43,679 பேர் பங்கேற்று தேர்வெழுதினர்.  

News image
Updated On :1 மார்ச் 2018, 9:24 pm

DIN

திருவள்ளூர் மாவட்டத்தில், பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வில் மாணவ, மாணவிகள் 43,679 பேர் பங்கேற்று தேர்வெழுதினர்.  
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வியாழக்கிழமை (மார்ச் 1) தொடங்கின. இதில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 338 பள்ளிகளைச் சேர்ந்த 20,934 மாணவர்களும், 23,191 மாணவிகளும் என மொத்தம் 44,125 பேர் இத் தேர்வை எழுதுகின்றனர். 
இதற்காக 113 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளியில் 20 மாணவர்களும், நேத்ராலயா சிறப்புப் பள்ளியைச் சேர்ந்த பார்வையற்ற 4 மாணவர்களும் 2 மாணவிகளும் தேர்வெழுதுகின்றனர். 
இதில், திருவள்ளூர் தேரடியில் உள்ள டி.ஆர்.சி.சி. மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் வியாழக்கிழமை ஆட்சியர் எ.சுந்தரவல்லி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, இது தொடர்பாக அவர் கூறியது: 
பிளஸ்2 தேர்வு நடைபெறும் ஒவ்வொரு மையங்களிலும் தேவையான பாதுகாப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. இதில், தேர்வர்கள் 400-க்கும் கூடுதலாக உள்ள மையங்களுக்கு கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளர்களும், கூடுதல் துறை அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், தேர்வர்களின் ஒழுங்கீனச் செயல்களைத் தடுக்க பறக்கும் படை உறுப்பினர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் ஒவ்வொரு தேர்வு மையங்களுக்கும் சென்று வரும் வகையில் வாகன வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 
மாற்றுத்திறனாளிகள் மற்றும் நரம்பியல் குறைபாடு காரணமாக பாதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு, கூடுதலாக ஒரு மணி நேர சலுகை வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். தேர்வுக்கு முன்னதாக கௌடி மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.
முதல் நாள் நடைபெற்ற பிளஸ் 2 தமிழ் முதல் தாள் தேர்வில் மொத்தம் உள்ள 44,125 மாணவ, மாணவிகளில் 43,679 பேர் பங்கேற்று தேர்வு எழுதினர். இதில் 446 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காப்பி அடித்த 3 மாணவர்கள் பிடிபட்டனர்
திருத்தணி, மார்ச். 1: பிளஸ் 2 பொதுத் தேர்வில் காப்பி அடித்த 3 மாணவர்களை பறக்கும் படையினர் பிடித்து தேர்வு கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தனர். 
பிளஸ் 2  பொதுத் தேர்வு வியாழக்கிழமை தொடங்கியது.  முன்னதாக மாணவ, மாணவிகள் திருத்தணி முருகன் கோயில், ம.பொ.சி.சாலையில் உள்ள சுந்தர விநாயகர் கோயில், பழைய பஜார் தெருவில் உள்ள சக்தி கணபதி கோயில் மற்றும் மேட்டுத் தெருவில் உள்ள வீரஆஞ்சநேயர் ஆகிய கோயில்களுக்குச் சென்று வழிபட்டனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மாணவர்கள் சிறப்பு பிரார்த்தனை நடத்தினர். பின்னர் மாணவர்களை ஆசிரியர்கள் கடும் சோதனை செய்த பின்பே தேர்வெழுதும் அறைக்குள் அனுமதித்தனர். 
திருத்தணி தாலுக்காவில் உள்ள அரசினர் ஆண்கள் மற்றும் மகளிர் மேல்நிலைப் பள்ளி, கெங்குசாமி நாயுடு மேல்நிலைப் பள்ளி, கே.ஜி.கண்டிகை, மத்தூர், கனகம்மாசத்திரம் ஆகிய ஆறு மையங்களில் பிளஸ் 2 மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர். இந்த பள்ளிகளில் மொத்தம் 2,500 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தமிழ் முதல்தாள் தேர்வை எழுதினர். அப்போது, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டாட்சியர் நரசிம்மன் தேர்வு அறைகளில் ஆய்வு மேற்கொண்டார். அதைத்தொடர்ந்து, சென்னை பள்ளி கல்வித்துறையில் இருந்து வந்த பறக்கும் படையினர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது காப்பி அடித்த 3 மாணவர்களைக் கண்டுபிடித்து தேர்வு முதன்மை கண்காணிப்பாளரிடம் ஒப்படைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.