திருவள்ளூர் நகராட்சியில் முழு சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டு வரும் தனிநபர் சுகாதார வளாகங்களுக்கு ஒதுக்கப்படும் நிதியை உயர்த்தி வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயனாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுகாதாரத்தை பாதுகாக்க....: மாநில அளவில் உள்ளாட்சி அமைப்புகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், சுகாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்திலும் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பொதுமக்கள் திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தடுக்கும் நோக்கத்தில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு தனிநபர் சுகாதார வளாகம் அமைக்கும் திட்டம் ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டது. இதை பொதுமக்கள் பெரிதும் வரவேற்றனர்.
பயனாளிகள் கோரிக்கை: இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் தூய்மை பாரத இயக்கத் திட்டம் மூலம் கடந்த 2015-இல் பேரூராட்சியில் தனிநபர் சுகாதார வளாகம் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி, 2016-17இல் மாநில அளவில் 124 நகராட்சிகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதில் தனிநபர் சுகாதார வளாகம் அமைக்க தலா ரூ.8 ஆயிரம் மட்டுமே ஒதுக்கப்படுவதால், இந்த நிதி போதுமானதாக இல்லை என்ற புகாரும் பயனாளிகளிடையே எழுந்துள்ளது.
கட்டுமானப் பொருள்கள் விலைக்கேற்ப உயர்த்தி வழங்க...: இதில் ஊராட்சிகளில் அமைக்கப்படும் சுகாதார வளாகங்களுக்கு ரூ.12 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆனால், நகராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில் ரூ.8 ஆயிரம் மட்டுமே வழங்கப்படுகிறது. தற்போதைய நிலையில் மணல், சிமெண்ட் விலை அதிகரித்துள்ளதால் இந்த நிதியை வைத்து சுகாதார வளாகம் கட்டமுடியாத சூழ்நிலையேற்பட்டுள்ளது. அதனால், நிதியை உயர்த்தி வழங்க வேண்டும் என்பதே பயனாளிகளின் எதிர்பார்ப்பாக உள்ளது.
அரசுக்கு பரிந்துரை: இதுகுறித்து திருவள்ளூர் நகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த நகராட்சியில் கடந்த 2016-17 இல் முதல் கட்டமாக 207 தனிநபர் சுகாதார வளாகமும், 255 கழிப்பறைகளும் கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. இப்பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ரூ.4 ஆயிரம், மாநில அரசு ரூ.2 ஆயிரமும், நகராட்சி மூலம் ரூ.2 ஆயிரமும் என மொத்தம் ரூ.8 ஆயிரம் வழங்கப்படுகிறது. ஆனால், இத்தொகை போதுமானதாக இல்லை எனவும், கூடுதலாக நிதி ஒதுக்க வேண்டும் எனவும் பயனாளிகளிடையே கோரிக்கைகள் எழுந்தன. இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவை உறுதிமொழிக் குழுவினர் ஆய்வுக்கு வந்த போது நிதியை உயர்த்துமாறு நகராட்சிகள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது, நிதியை உயர்த்தி வழங்குவது குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என அக்குழுவினர் உறுதி அளித்துச் சென்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அஸ்ஸாம் வெள்ளம்: உயிரிழப்பு 98-ஆக உயா்வு

இன்றைய ராசி பலன்கள் (ஆகஸ்ட் 09) - மேஷ ராசிக்கு முன்னேற்றம்!

இன்றைய ராசி பலன்கள் (09.08.2026) 12 ராசிகளுக்கும்! எதிர்ப்புகள் விலகும் இந்த ராசிக்கு!

ஜப்பானைத் தாக்கிய ‘டால்பின்’ புயல்
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK


