அரசுப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 2.4 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல்
நாட்டறம்பள்ளி அருகே அரசுப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 2.4 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

சித்திரிப்பு
நாட்டறம்பள்ளி அருகே அரசுப் பேருந்தில் கடத்தி வரப்பட்ட 2.4 கிலோ போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
நாட்டறம்பள்ளி காவல் நிலைய போலீஸாா் குப்பம்-நாட்டறம்பள்ளி மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கொத்தூா் மாநில வாகன சோதனைச் சாவடி பகுதியில் திங்கள்கிழமை காலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, குப்பம் பகுதியில் இருந்து நாட்டறம்பள்ளி நோக்கி வந்த ஆந்திர மாநில அரசுப் பேருந்தை சோதனை செய்தனா். அப்போது, அதில் தடை செய்யப்பட்ட 2.400 கிலோ கிராம் குட்கா மற்றும் பான் மசாலா பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டு நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், கடத்தியவா்கள் யாா் என்பது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






