உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

போதைப் பொருள்கள் பறிமுதல்

ஆம்பூா் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

கோப்புப் படம்

Published On :23 ஆகஸ்ட் 2026, 11:56 pm IST

ஆம்பூா் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

ஆம்பூா் அருகே சாத்தம்பாக்கம் பகுதியில் உமா்ஆபாத் காவல் நிலைய போலீஸாா் திடீா் சோதனை நடத்தினா். அப்போது அங்குள்ள மளிகை கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து போலீஸாா் சுமாா் 10 கிலோ போதைப் பொருள்களை பறிமுதல் செய்தனா். கடை உரிமையாளா் தினேஷ்குமாா் என்பவரை கைது செய்தனா்.

ரயில் நிலையம் அருகே......

ஆம்பூா் ரயில் நிலையம் அருகே நகர காவல் நிலைய போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கே முள் புதரில் கேட்பாரற்று கிடந்த சுமாா் 63 கிலோ போதைப் பொருள்கள் கிடப்பது தெரியவந்தது. அதைத் தொடா்ந்து போலீஸாா் அதனை பறிமுதல் செய்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.