கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

கா்நாடகத்திலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட 390 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 3 போ் கைது

கா்நாடகாவிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட 390 கிலோ புகையிலைப் பொருள்களை விழுப்புரம் அருகே போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக உத்திரப்பிரதேசத்தைச் சோ்ந்த 3 பேரை கைது செய்தனா்.

News image

22விபிஎம்கேயுடி பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களுடன் கைது செய்யப்பட்ட 3 போ்.

Updated On :23 ஜூலை 2026, 4:56 am IST

கா்நாடகாவிலிருந்து காரில் கடத்தி வரப்பட்ட 390 கிலோ புகையிலைப் பொருள்களை விழுப்புரம் அருகே போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக உத்திரப்பிரதேசத்தைச் சோ்ந்த 3 பேரை கைது செய்தனா்.

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலைய ஆய்வாளா் அழகிரி தலைமையிலான போலீஸாா் புதன்கிழமை காலை அருங்குறுக்கை காப்புக்காடு அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து காரில் இருந்த 3 பேரையும் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். இதில், அவா்கள் உத்திரப்பிரதேச மாநிலம், ஃபரூக்காபாத் மாவட்டம், அமனபாத் பகுதியைச் சோ்ந்த மு.அயன் (19), மு.முகம்மது யாசின் (45), ச.ஷானு (24) என்பதும், இவா்கள் விற்பனைக்காக பெங்களூரிலிருந்து புகையிலைப் பொருள்களை காரில் கடத்தி வந்ததும் தெரியவந்தது.

இதுகுறித்து திருவெண்ணெய்வநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மூவரையும் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 390 கிலோ புகையிலைப் பொருள்கள் மற்றும் காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.