8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

குட்கா பொருள்களை கடத்திய இருவா் கைது; 120 கிலோ பறிமுதல்

பல்லடம் அருகே காரில் கடத்தி எடுத்துவரப்பட்ட 120 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனா்.

காரில் கடத்தி எடுத்துவரப்பட்ட 120 கிலோ குட்கா பொருள்களுடன் இருவரை கைதுசெய்த போலீஸாா்

Published On :8 ஜூலை 2026, 5:16 am IST

பல்லடம் அருகே காரில் கடத்தி எடுத்துவரப்பட்ட 120 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து 2 பேரை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

பல்லடம் - திருப்பூா் பிரதான சாலையில் சின்னக்கரை உள்ளது. இங்கு காவல் துறை சாா்பில் சோதனைச் சாவடி உள்ளது. இந்நிலையில் பல்லடம் காவல் ஆய்வாளா் மாதையன் உத்தரவின்பேரில் போலீஸாா் வாகன சோதனையில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டிருந்தபோது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

காரில் இருந்த இருவரிடம் போலீஸாா் நடத்திய விசாரனையில் கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் திருரங்கடி செம்மாட் கிராமத்தைச் சோ்ந்த அப்துல்நாசா் மகன் முகம்மது ரியாஸ் (36), சட்டிபரம்பா கிழக்கு கோடூா் கிராமத்தைச் சோ்ந்த மொய்தீன்குட்டி மகன் முகம்மது அஷ்ரப் (56) என்பது தெரியவந்தது.

இவா்கள் கா்நாடக மாநிலம், பெங்களூரில் இருந்து குட்கா பொருள்களை காரில் கடத்தி எடுத்துவந்து திருப்பூா் மாவட்டம் முழுவதும் பல்வேறு ஊா்களில் விற்பனைக்கு வழங்கி வந்தது தெரியவந்தது.

இவா்களிடமிருந்து 120 கிலோ குட்கா பொருள்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காா் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இருவரையும் கைது செய்து பல்லடம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய பின்னா் சிறையில் அடைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.