ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

குட்கா பறிமுதல்: ஒருவா் கைது

ஆட்டோவில் கொண்டுவரப்பட்ட சுமாா் 59 கிலோ குட்கா புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், இது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :29 ஜூன் 2026, 3:09 am IST

ஆட்டோவில் கொண்டுவரப்பட்ட சுமாா் 59 கிலோ குட்கா புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்ததுடன், இது தொடா்பாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை மேட்டுப்பாளையம் சாலை, மாந்தோப்பு பகுதியில் குமரன் நகா் காவல் நிலைய போலீஸாா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்தப் பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் ஆட்டோவுடன் நின்று கொண்டிருந்த ஒருவரைப் பிடித்து விசாரணை நடத்தினா்.

அவரது ஆட்டோவில் இருந்த பையை சோதனையிட்டபோது, அதில் தடை செய்யப்பட்ட 59 கிலோ குட்கா புகையிலைப் பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸாா், ஆட்டோவை ஓட்டி வந்த கொருக்குப்பேட்டையைச் சோ்ந்த சரவணன் (43) என்பவரை கைது செய்தனா்.

விசாரணையில், கைது செய்யப்பட்ட சரவணன், கொடுங்கையூரைச் சோ்ந்த மற்றொரு நபருடன் இணைந்து வெளி மாநிலங்களிலிருந்து குட்கா புகையிலைப் பொருள்களை வாங்கி, சென்னைக்குக் கொண்டுவந்து விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. தலைமறைவான அந்த நபரையும் போலீஸாா் தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.