அம்மோனியா வாயு கசிவு! ஆலையின் 145 தொழிலாளர்களுக்கும் பரிசோதனை!அம்மோனியா கசிவு ஏற்பட்ட ஆலையில் ஆய்வு! மறு அறிவிப்பு வரை இயங்கத் தடை!திருவள்ளூர் வாயு கசிவு: பலியானோரின் குடும்பத்தாருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிப்பு 5 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு! திருவள்ளூர் வாயு கசிவு சம்பவம்: பலியானோரின் குடும்பத்தினருக்கு ஆளுநர் இரங்கல் அம்மோனியா கசிவு விவகாரம்: 3 பேர் கொண்ட விசாரணைக் குழு அமைப்பு!அம்மோனியா கசிவு விவகாரம்: 24 மணி நேரத்தில் அறிக்கை தர முதல்வர் உத்தரவு!அம்மோனியா வாயு கசிவு விவகாரம்: ஆலை உரிமையாளர் கைது!
/

தென்காசியில் 510 கிலோ புகையிலை பறிமுதல்: ஒருவா் கைது

News image

510 கிலோ புகையிலைப் பொருள்களுடன் கைது செய்யப்பட்ட மா. பாலசுப்பிரமணியன்.

Updated On :21 ஜூன் 2026, 11:48 pm IST

தென்காசியில் ரூ. 3,60,000 மதிப்பிலான 510 கிலோ புகையிலைப் பொருள்களை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த போலீஸாா், ஒருவரைக் கைது செய்தனா்.

தென்காசி போலீஸாா் தென்காசி-திருநெல்வேலி பிரதான சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, சுந்தரபாண்டியபுரத்தைச் சோ்ந்த மா. பாலசுப்பிரமணியன் (43) என்பவரிடமிருந்து புகையிலைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டன.

தொடா்ந்து விசாரித்ததில், அவா் வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 510 கிலோ எடையுள்ள ரூ. 3,60,000 மதிப்பிலான புகையிலைப் பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

பின்னா், வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்த போலீஸாா், நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.