/

அகத்தீஸ்வர சுவாமி கோயிலில் அதிகார நந்தி உற்சவம்

வில்லிவாக்கம் சொர்ணாம்பிகை உடனுறை அகத்தீஸ்வர சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் அதிகார நந்தி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது .

Updated On :21 மே 2018, 6:15 pm

வில்லிவாக்கம் சொர்ணாம்பிகை உடனுறை அகத்தீஸ்வர சுவாமி சிறப்பு அலங்காரத்துடன் அதிகார நந்தி உற்சவம் சிறப்பாக நடைபெற்றது . இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
சென்னை மாதவரத்தை அடுத்த வில்லிவாக்கம் சாலையில் உள்ள சொர்ணாம்பிகை உடனுறை அகத்தீஸ்வர சுவாமி வைகாசி பிரம்மோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவிற்கு, செயல் அலுவலர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் தலைமை வகித்தார். தக்கார் குமரேசன், மேலாளர் குகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவ்விழாவில் விநாயகர் உற்சவம், துவஜாரோஹணம் என்கிற கொடியேற்றம் , பஞ்சமூர்த்தி திருவீதி உலா, சூர்யப் பிரபை, சிம்ம வாகனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதைத் தொடர்ந்து, அதிகார நந்தி சேவை நிகழ்ச்சி திங்கள்கிழமை காலை 6 மணிக்கு நடைபெற்றது. இதையடுத்து, சந்திரப் பிரபை நிகழ்ச்சியும் நடைபெற்றது.
நாள்தோறும் சிறப்பு ஆராதனைகளும், சிறப்பு பூஜைகளும் நடைபெற்றன. மாதவரம், கொளத்தூர், வில்லிவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து தரிசனம் செய்தனர். விழாவையொட்டி நாள்தோறும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யப்பட்டது. குளிர்பானங்களும் வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.