திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக-வில் உள்ள 18 சார்பு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த கவரப்பேட்டையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக-வின் இளைஞர் அணி, மாணவர் அணி, இலக்கிய அணி, நெசவாளர் அணி, மீனவர் அணி, பொறியாளர் அணி, வழக்கறிஞர் அணி, மகளிர் அணி, தொண்டர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்ட 18 சார்பு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கவரப்பேட்டையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கி.வேணு தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் பகவலன், மாவட்ட நிர்வாகிகள் பரிமளம், சத்தியராஜ், கதிரவன், பொதுக்குழு உறுப்பினர்
பா.செ.குணசேகரன், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக துணைச் செயலாளர் திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில், மாவட்டச் செயலாளர் கி.வேணு பேசியது:
திமுக-வில் பல்வேறு அணிகளின் சார்பாக சுமார் 150க்கும் மேற்பட்டோர் பதவிகளைப் பெற்றிருக்கும் நிலையில், பதவியில் உள்ளவர்கள் சிலர் கட்சிப் பணிகளில் ஈடுபடாமல் உள்ளனர். இதனால் கட்சி வளர்ச்சிக்கு அவர்களால் பின்னடைவு ஏற்படும் நிலை உள்ளது. இனி வரும் காலங்களில் கட்சிப் பணிகளில் ஈடுபடாத நிர்வாகிகளின் பதவி பறிக்கப்படும் என அவர் எச்சரித்தார்.
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த நாளை வரும் ஜூன்
3ஆம் தேதி அனைத்து சார்பு அணிகளின் சார்பாகவும் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் எனக் கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

குட்டித் தூக்கம் போடுபவர்களுக்காக போட்டி நடத்திய தென் கொரியா!

நமன் திர் அரைசதம்; சிஎஸ்கேவுக்கு 160 ரன்கள் இலக்கு!
பிருத்விராஜின் கலிஃபா வெளியீட்டுத் தேதி!

ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

