கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழி

திருவள்ளூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழியை ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் எடுத்துக் கொண்டனர்.

Updated On :21 மே 2018, 7:13 pm

திருவள்ளூரில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நினைவு தினத்தையொட்டி கொடுஞ்செயல் எதிர்ப்பு தின உறுதிமொழியை ஆட்சியர் தலைமையில் அதிகாரிகள் எடுத்துக் கொண்டனர்.
ராஜீவ் காந்தியின் நினைவு தினம் (மே 21), ஆண்டுதோறும் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினமாக நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இதற்கான நிகழ்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் ஆட்சியர் எ.சுந்தரவல்லி கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழியை வாசிக்க அதிகாரிகள் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். இதில், மாவட்ட வருவாய் அலுவலர் சந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் குமார், சமூகப் பாதுகாப்பு திட்ட அலுவலர் ஜானகிராமன் உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.