திருவள்ளூர் மாவட்டத்தில் 24 மையங்களில் நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தேர்வில் 7,580 பேர் பங்கேற்று தேர்வு எழுதியதாக முதன்மைக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் தெரிவித்தார்.
தமிழகத்தில் கிராமங்களில் இருந்து அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் மாணவ- மாணவிகள் இடை நிற்றலை தடுக்கும் வகையில், மத்திய, மாநில அரசு சார்பில் பல்வேறு வகையான போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதேபோல் 10-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவ, மாணவிகளுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வும் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல், நிகழாண்டுக்கான இத்தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து இத்தேர்வு எழுதுவதற்கு 8,521 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.
இத்தேர்வுக்காக மாவட்ட அளவில் அமைக்கப்பட்ட 24 மையங்களில், மொத்தம் 7,580 பேர் பங்கேற்று தேர்வெழுதினர்.
இதில், 941 பேர் தேர்வில் கலந்து கொள்ளவில்லை. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு பிளஸ் 2 வரை கல்வி உதவித்தொகையாக ஆண்டுதோறும் ரூ. 1,250 வழங்கப்பட உள்ளது. அதேபோல், இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கு ரூ. 2 ஆயிரமும், ஆராய்ச்சிப் படிப்புக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட உள்ளது. இதுபோன்ற காரணங்களால் மாணவ, மாணவிகள் இத்தேர்வில், ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்றைய செய்திகள் ஜூன் 9 - நேரலை!

பவானி - துபைக்கு ரூ. 10,000! அரசுப் பேருந்து டிக்கெட்டால் அதிர்ச்சி!

அரசுக் கலைக் கல்லூரிகளில் அதிக விண்ணப்பம் வந்திருக்கும் படிப்பு இதுதான்!

தமிழ்நாட்டில் இன்று 4, நாளை 3 மாவட்டங்களில் கனமழை!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP


