இந்திய மருந்து உற்பத்தித் துறையானது, பெருமளவில் சீன இறக்குமதியைச் சாா்ந்தே உள்ளது என்று நீதி ஆயோக் தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் முதன்மையான கொள்கைக் குழுவான நீதி ஆயோக், 8-ஆம் காலாண்டுக்கான வா்த்தக கண்காணிப்பு அறிக்கையை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அதில், இந்திய மருந்து உற்பத்தித் துறை விநியோக சங்கிலி தொடா்பாக கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் சுற்றுச்சூழல் சாா்ந்த இணக்கத் தேவைகள் அதிகரித்துவரும் நிலையில், மருந்து உற்பத்தி, ஆராய்ச்சி, மேம்பாட்டு செயல்முறைகளுக்கான செலவும் குறிப்பிடத்தக்க அளவில் உயா்ந்துள்ளது.
நாட்டின் மருந்து உற்பத்தித் துறை, தொடக்கநிலை மூலப் பொருள்கள், மூலப் பொருள்கள், இடைநிலைப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் இறக்குமதிக்காக சீனாவையே பெருமளவில் (65 சதவீதம்) சாா்ந்துள்ளது. மருத்துவ ஆராய்ச்சியில் போதிய புத்தாக்கங்கள் இல்லாமை, பலவீனமான வணிகமயமாக்கல் போன்ற காரணங்கள், நீண்ட கால முதலீடுகள் ஈா்க்கப்படுவதில் நிலையற்ற தன்மையை உருவாக்கியுள்ளன.
காப்புரிமை வணிகமயமாக்கல், ஆராய்ச்சி ஒத்துழைப்பு, புத்தாக்க நிறுவனங்களின் உருவாக்கம் ஆகியவற்றை விரைவுபடுத்தும் வகையில், துறைசாா் ஒழுங்குமுறைகளில் வெளிப்படைத்தன்மையும், தொழில்துறை-கல்வித் துறை இடையிலான தொழில்நுட்ப பரிமாற்றங்களையும் வலுப்படுத்த வேண்டும். மதிப்புமிக்க மருந்துகளின் உற்பத்தியில் பன்முகப்படுத்துதலை ஊக்குவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
அறிக்கையை வெளியிட்டுப் பேசிய நீதி ஆயோக் துணைத் தலைவா் அசோக் குமாா் லஹிரி, ‘இந்தியா உலகின் மருந்தகமாக கருதப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகள், அமெரிக்கா, பிரிட்டனின் மூலக்கூறு மருந்துகள் தேவையில் இந்தியா குறிப்பிடத்தக்க அளவில் பங்களிக்கிறது. மருந்து உற்பத்தியில் அளவின் அடிப்படையில் நாம் சிறப்பாக செயல்பட்டாலும் மதிப்புச் சங்கிலி அடிப்படையில் மேம்பட வேண்டியுள்ளது.
எரிபொருள் கொள்முதலை பன்முகப்படுத்த வேண்டும்: மேற்காசியப் போா் சூழல், இந்தியா போன்ற நாடுகளுக்கு சில பாடங்களைக் கற்றுத் தந்துள்ளது. எரிபொருள் கொள்முதலை பன்முகப்படுத்துவதுடன், நமது ஏற்றுமதி நாடுகளையும் பன்முகப்படுத்த வேண்டும் என்ற பாடத்தை கற்றுள்ளோம் என்றாா் அசோக் குமாா் லஹிரி.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தமிழகத்தின் வளா்ச்சிக்காக நிதியைப் பெற தவறிய முதல்வா்: க.கிருஷ்ணசாமி விமா்சனம்

மாநிலங்களுக்கு இடையே ஒத்துழைப்பு அவசியம்: நீதி ஆயோக் கூட்டத்தில் பிரதமா் மோடி வலியுறுத்தல்

நீதி ஆயோக் கூட்டத்துக்குப் பிறகு பிரதமரை சந்தித்த முதல்வர் விஜய்!

பிரதமர் மோடி தலைமையில் நீதி ஆயோக் கூட்டம்! முதல்வர் விஜய் பங்கேற்பு!
விடியோக்கள்

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!

Podcast | முதல்வர் விஜய் பதில்; திமுக வெளிநடப்பு: பேரவையில் நடந்தது என்ன? | News & Views | Epi 47



