இல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!திமுக கூட்டணியில் இருந்து சிபிஐ வெளியேறியது ஏன்? - மு. வீரபாண்டியன் விளக்கம்தில்லியில் முதல்வர் விஜய் தங்கியிருந்த இடத்தில் தீ விபத்து!பாரதிராஜாவுக்கு பிரதமர் மோடி இரங்கல்அரசுப் பள்ளியில் மகளை சேர்த்த மானாமதுரை தவெக எம்எல்ஏவுக்கு குவியும் வாழ்த்து!தமிழகத்தில் புறவாசல் வழியாக வேறு ஆட்சியை நிறுவ முயற்சித்தனா்: எம்.ஏ. பேபி குற்றச்சாட்டுநேருவின் 17-ஆண்டுச் சாதனையைப் போற்றுவோம்: ப. சிதம்பரம்
/

நீதி ஆயோக் கூட்டத்துக்குப் பிறகு பிரதமரை சந்தித்த முதல்வர் விஜய்!

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதல்வர் விஜய் குறித்து...

News image

பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த முதல்வர் விஜய். - படம்: TNDIPR

Updated On :11 ஜூன் 2026, 7:31 pm IST

நீதி ஆயோக் கூட்டத்துக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் சி. ஜோசப் விஜய் சந்தித்தார்.

மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக தில்லி சென்றுள்ள, முதல்வர் ஜோசப் விஜய், இன்று நடைபெற்ற நீதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார்.

நீதி ஆயோக் கூட்டத்தில் தமிழக நிதி மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான நிதித் தேவைகள் குறித்து விரிவாக முதல்வர் பேசினார்.

மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு எங்கள் அரசு தொடர்ந்து உறுதிபூண்டுள்ளதாக நீதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் தெரிவித்தார்.

மேலும், அவர் பேசுகையில், “வெளிப்படையான நிர்வாகம், சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, இளைஞர்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் சமச்சீரான முன்னேற்றம் ஆகிய அடிப்படைக் கொள்கைகளை முன்னிறுத்தி, தமிழ்நாட்டு மக்கள் எங்கள் அரசுக்கு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியுள்ளனர்.

அவர்களின் நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில், தமிழ்நாட்டின் நலன்களையும் மக்களின் விருப்பங்களையும் உறுதியாகப் பாதுகாக்கும் வேளையில், மத்திய அரசுடன் ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்புடன் செயல்படுவதற்கு எங்கள் அரசு தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது” என்றார்.

இதனிடையே, பிரதமர் நரேந்திர மோடியை இன்று (ஜூன் 11) புதுதில்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகை கலாச்சார மையத்தில், நீதி ஆயோக்கின் 11-வது ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் நிறைவடைந்த பின்னர், முதல்வர் ஜோசப் விஜய் சந்தித்துப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து, இன்றிரவு பிரதமர் அளிக்கும் விருந்தில் முதல்வர் விஜய் பங்கேற்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

Summary

Chief Minister C. Joseph Vijay met Prime Minister Narendra Modi after the NITI Aayog meeting.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.