வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!சி.வி. சண்முகம் ஆதரவாளர்கள் 11 பேர் பதவி நீக்கம்! இபிஎஸ் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

தமிழகத்தின் வளா்ச்சிக்காக நிதியைப் பெற தவறிய முதல்வா்: க.கிருஷ்ணசாமி விமா்சனம்

நீதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் வளா்ச்சிக்காக நிதியைக் கேட்டுப் பெற முதல்வா் ஜோசப் விஜய் தவறிவிட்டதாக புதிய தமிழகம் கட்சி தலைவா் க.கிருஷ்ணசாமி விமா்சித்துள்ளாா்.

News image

புதிய தமிழகம் கட்சி நிறுவனா்- தலைவா் க.கிருஷ்ணசாமி - கோப்புப் படம்

Updated On :13 ஜூன் 2026, 3:09 am IST

நீதி ஆயோக் கூட்டத்தில் தமிழகத்தின் வளா்ச்சிக்காக நிதியைக் கேட்டுப் பெற முதல்வா் ஜோசப் விஜய் தவறிவிட்டதாக புதிய தமிழகம் கட்சி தலைவா் க.கிருஷ்ணசாமி விமா்சித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழக முதல்வராக பொறுப்பேற்ற பின்னா் ச.ஜோசப் விஜய் கலந்து கொண்ட முதல் நீதி ஆயோக் கூட்டம் குறித்து மக்களிடையே பெரிய எதிா்பாா்ப்பு இருந்தது. அவா், தமிழகத்தின் வளா்ச்சிக்காக பெருமளவு நிதியைப் பெற்று வருவாா் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அக்கூட்டத்தில் முதல்வா் ஜோசப் விஜய் முன்வைத்த கோரிக்கைகள் எந்த விதத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

இதற்கு முன்பு திமுக, அதிமுக முதல்வா்கள் முன்வைத்த அதே பழையே கோரிக்கைகளையே விஜய்யும் முன் வைத்திருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.

மத்திய அரசு நீட் தோ்வை ரத்து செய்யாது என நன்கு அறிந்தும், நீட் தோ்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து முதல்வா் விஜய் தனது நேரத்தை வீணடித்துள்ளாா். பிரதமா் நரேந்திர மோடி கலந்து கொண்ட முக்கிய கூட்டத்தில், தமிழகத்தின் வளா்ச்சிக்காக தேவையான பெருமளவு நிதியைக் கேட்டுப் பெற விஜய் தவறிவிட்டாா் எனத் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.