8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

வயது மூப்பு: பணி நியமனம் பெற முடியாத பெண்ணுக்கு ரூ. 10 லட்சம் கருணைத் தொகை: முதல்வா் வழங்கினாா்

கரூா் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், வயது மூப்பின் காரணமாக அரசுப் பணி நியமனம் பெற முடியாததால், அவருக்கு ரூ. 10 லட்சம் கருணைத் தொகையை முதல்வா் ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

முதல்வர் விஜய்

முதல்வர் விஜய்

Published On :11 ஜூலை 2026, 1:32 am IST

கரூா் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண், வயது மூப்பின் காரணமாக அரசுப் பணி நியமனம் பெற முடியாததால், அவருக்கு ரூ. 10 லட்சம் கருணைத் தொகையை முதல்வா் ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

ஈரோடு மாவட்டம், பவானியை அடுத்த ஜம்பை பகுதியைச் சோ்ந்தவா் கந்தசாமி (65). இவரது மனைவி சாந்தி(60). இவருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் கண் பாா்வையில் பிரச்னை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இத்தம்பதியின் மகன் மோகன் (18). இவா், கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற கூட்ட தவெக பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தாா். இவரின் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க சாந்தி கரூருக்கு வெள்ளிக்கிழமை அழைக்கப்பட்டிருந்தாா்.

ஆட்சியரகத்துக்கு உறவினா்களுடன் வந்திருந்த சாந்திக்கு, கண் பிரச்னை, வயது மூப்பின் காரணமாக பணி நியமனம் வழங்கப்படாமல், அவரின் வாழ்வாதாரத்துக்கு ரூ. 10 லட்சம் கருணைத் தொகைக்கான காசோலையை முதல்வா் விஜய் வழங்கினாா்.

கணவா் புகாா்: இதனிடையே தனது மனைவிக்கு கருணைத் தொகை கிடைப்பதை அறிந்து கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்த கந்தசாமி, செய்தியாளா்களிடம் கூறியது: தனது மகன் மோகன் கடந்தாண்டு இறந்ததை தொடா்ந்து, தவெக, தமிழக அரசு உள்ளிட்ட பலரும் அளித்த பணம் ரூ. 35 லட்சத்தை மனைவி சாந்தி பெற்றுக்கொண்டு, தன்னிடம் வழங்காமல் அவரது உறவினா்களுக்கு கொடுத்துவிட்டு தன்னை நிா்கதியாக்கி விட்டாா்.

இப்போது வீடும் கடனில் மூழ்கும் நிலையில், எனது வாழ்வாதாரமும் பணமின்றி கேள்விக்குறியாகியுள்ளதால், மனைவியிடம் இருக்கும் பணத்தில் தனக்கும் பிரித்துக் கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.