நாட்டுக்காக பிரதமர் நரேந்திர மோடி 25 ஆண்டுகளாகப் பணியாற்றி வருவதாக தில்லி முதல்வர் ரேகா குப்தா கூறியுள்ளார்.
தில்லியில் விக்சித் பாரத் சங்கல்ப் சம்மேளனத்தில் தில்லி முதல்வர் ரேகா குப்தா பேசியதாவது, "பிரதமர் மோடி, 15 ஆண்டுகள் முதல்வராகவும், 12 ஆண்டுகள் பிரதமர் என 25 ஆண்டுகளாக பொதுச் சேவையில் பணியாற்றியுள்ளார். இந்தக் காலகட்டத்தில் அவர் ஒருநாள்கூட விடுப்பு எடுத்ததில்லை.
இந்திய மக்களுக்கு சேவை செய்வதிலேயே அவர் தொடர்ந்து அர்ப்பணித்துள்ளார்.
மக்களைக் கடவுளாகவும், ஜனநாயகத்தை கோயிலாகவும் கருதி நாட்டுக்காக அவர் பணியாற்றி வருகிறார்.

நிகழ்ச்சியில் பேசிய தில்லி முதல்வர் ரேகா குப்தா
பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, இந்தியா ராக்கெட் வேகத்தில் வளரத் தொடங்கியது. இந்த 12 ஆண்டுகளில் நாடு எவ்வளவு முன்னேற்றம் அடைந்துள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
இன்று ஒரு ரிக்ஷா ஓட்டுநர், காய்கறி விற்பவர், சிறிய தேநீர்க் கடைக்காரர் என ஒவ்வொருவரும் என்னிடம் பணம் இல்லை, யுபிஐ மூலம் பணம் செலுத்துங்கள் என்று கூறுகின்றனர்.
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில் இந்தியா இவ்வளவு முன்னேற்றத்தை அடையும் என்று யாரும் கற்பனை செய்திருக்க மாட்டார்கள்" என்று தெரிவித்தார்.
Summary
PM Modi has served in public office for 25 years, says Delhi CM Rekha Gupta
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









