முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் நினைவு நாளையொட்டி தலைநகர் தில்லியில் மேலும் அடல் உணவகங்கள் ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டன.
முன்னாள் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவுடன் இணைந்து தில்லி முதல்வர் ரேகா குப்தா காணொளி வாயிலாக உணவகங்களை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தில்லி நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஆஷிஷ் சூத் மற்றும் வடகிழக்கு தில்லி எம்.பி. மனோஜ் திவாரியும் கலந்துகொண்டனர்.
புதிதாக திறக்கப்பட்ட உணவகங்கள் எய்ம்ஸ் மற்றும் எல்.என்.ஜே.பி உள்ளிட்ட மருத்துவமனைகளின் வெளியிலும், ஜனக்புரி, விகாஸ்புரி மற்றும் நகரின் பிற பகுதிகளில் உள்ள குடிசைப் பகுதிகளிலும் அமைந்துள்ளன.
குடிசைவாசிகள், தினக்கூலிகள், கட்டுமானத் தொழிலாளர்கள் உட்பட 1 லட்சம் ஏழை எளிய மக்களுக்கு ரூ.5 வீதம் உணவு வழங்குவதற்காக, தில்லி அரசு 7-8 மாதங்களுக்குள் 100 உணவகங்களை நிறுவி செயல்பாட்டிற்குக் கொண்டு வந்துள்ளதாக முதல்வர் ரேகா குப்தா அப்போது தெரிவித்தார்.
அந்தியோதயா கொள்கையின் கீழ், ஒரு ஆண்டில் 3.65 கோடி மக்களுக்குத் தூய்மையான, சத்தான உணவை அரசு வழங்கும் என்று அவர் மேலும் கூறினார். தில்லியில் ஆட்சிக்கு வந்தால் அடல் உணவங்கள் திட்டம் தொடங்கப்படும் என கடந்த ஆண்டு நடைபெற்ற பேரவைத் தோ்தலில் பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.
பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்த பாஜக நிலையில், அடல் உணவகம் திட்டத்தை முதல்வா் ரேகா குப்தா கடந்த ஆண்டு டிச.25-ஆம் தேதி தொடங்கிவைத்தாா். இந்தத் திட்டத்துக்காக தில்லி அரசு ரூ.104 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
Summary
CM Rekha Gupta, along with former Vice President of India Venkaiah Naidu, inaugurated 25 Atal canteens across the city on Sunday, marking the death anniversary of former Prime Minister Atal Bihari Vajpayee.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் மீண்டும் திறப்பு

கால்பந்து இறுதிப் போட்டி: தில்லி உணவகங்கள், கஃபேக்கள் அதிகாலை வரை செயல்படும்!
தில்லியில் மேலும் 24 ‘அடல் உணவகம்’ ஆகஸ்ட் 16-இல் திறப்பு!

மக்களைக் கடவுளாகவும், ஜனநாயகத்தை கோயிலாகவும் கருதி பணியாற்றும் பிரதமர்: தில்லி முதல்வர்
விடியோக்கள்

சர்க்கஸ் கும்பல் ஆட்சி! உதயநிதி ஸ்டாலின்! | DMK | TVK



