மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் மீண்டும் திறப்பு

தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் மீண்டும் திறக்கப்பட்டது பற்றி....

News image

தில்லி மெட்ரோ.

Updated On :25 ஜூலை 2026, 8:09 pm IST

தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களையும் திறப்பதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டுமென கடந்த ஜூன் 20 முதல் தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியினர் நடத்தி வந்த போராட்டம் நாடு முழுவதும் பரவியது. தில்லி ஜந்தர் மந்தரிலும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில், மாணவர் போராட்டங்கள் காரணமாக மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று (ஜூலை 25) தனது பதவியை ராஜிநாமா செய்தார். தொடர்ந்து மத்திய அரசுடன் நடந்த 3ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் சிஜேபியின் 3 முக்கிய கோரிக்கைகளையும் அரசு ஏற்பதாகவும் உறுதி அளித்தது.

இதையடுத்து தில்லியில் 36 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை கைவிடுவதாக சிஜேபி அறிவித்தது. இதனால் தலைநகர் தில்லியில் மீண்டும் இயல்பு நிலை திரும்பியுள்ளது. எனவே, மூடப்பட்டிருந்த தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் அனைத்தும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தில்லி மெட்ரோ நிர்வாகம் எக்ஸ் தளத்தில், "தில்லி மெட்ரோ ரயில் நிலையங்களின் அனைத்து நுழைவு வாயில்களும் தற்போது திறக்கப்பட்டுள்ளன" என்று பதிவிட்டுள்ளது. சிஜேபி தனது போராட்டத்தை கைவிட்ட நிலையல் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Summary

Entry gates at all stations across the Delhi Metro network have been reopened, the Delhi Metro Rail Corporation (DMRC) said on Saturday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.