சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கண்டுபிடிப்புத் திறனை அதிகரிக்கும் நோக்கில் மாவட்ட தொழில் மையம் மூலம் புத்தாக்க பற்றுச்சீட்டு திட்டம் செயல்படுத்தப்பட இருப்பதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிகுமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு விவரம்:
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்கள் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டுத் திட்டம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இத்திட்டம் 400 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் தொழில் முனைவோருக்கு 2018-19 முதல் ஆண்டு தோறும் ரூ.20 கோடி வரவு-செலவு திட்டத்தில் செயல்படுத்தப்படும். தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் அரசு புத்தாக்க பற்றுச்சீட்டு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
நோக்கம்: இத்திட்டம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கண்டுபிடிப்புத் திறனை அதிகரிக்கவும், புதுமையான தயாரிப்புகளை வணிக ரீதியாக செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அரசு புதிதாக புத்தாக்க பற்றுச்சீட்டு என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டம் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் கண்டுபிடிப்பு திறனை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
ஆய்வு செய்தல்: ஒரு புதிய தயாரிப்பு அல்லது உற்பத்தி செயல்முறை வளர்ச்சிக்கு முன்னால் கண்டுபிடிப்புக்கு சாதகமான பகுப்பாய்வுக்கு பற்றுச்சீட்டை (யூ) பயன்படுத்த வேண்டும்.
சந்தையில் நுழைதல்: ஒரு புதுமையான வணிக தயாரிப்பை ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் சாத்தியமான சந்தை வாய்ப்புகளை விரைவாக அனுகுவதற்கு ஏற்கெனவே இருக்கும் அல்லது ஆரம்ப கால தொழிலை மேம்படுத்துவதற்கு பற்றுச்சீட்டு (டி) பயன்படுத்த வேண்டும்.
பற்றுச்சீட்டு (யூ): அதிகபட்சமாக ரூ.2 லட்சத்துக்கு உள்பட்டு அங்கீகரித்த நடவடிக்கைக்கான அறிவுத்திறன் பங்குதாரரின் செலவில் 80 சதவீதம் அதாவது ஒரு நிறுவனத்தின் தொழில்நுட்ப, வணிக ரீதியான புதிய யோசனைகளை செயல்படுத்த மற்றும் தொழில்நுட்பக் கண்டுபிடிப்புக்கான அபிவிருத்திக்கான வழிகளை ஆய்வு செய்ய வேண்டும்.
பற்றுச்சீட்டு (டி): தயாரிப்பு செயல்முறை வணிக மாதிரி கண்டுபிடிப்புத் திட்டத்தை செயல்படுத்த அதிகபட்சம் ரூ.5 லட்சத்திற்கு உள்பட்ட அங்கீகரிக்கப்பட்ட நடவடிக்கைக்கான அறிவுத்திறன் பங்குதாரரின் செலவில் 50 சதவீதம் வழங்கப்படும். இதில் ரூ.1 லட்சத்திற்கு கீழ் உள்ள திட்டங்கள் இத்திட்டத்தில் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
பற்றுச்சீட்டு (யூ) மற்றும் பற்றுச்சீட்டு (டி) இல் குறிப்பிடப்பட்ட நிதிக்கு அதிகமாக செலவழிக்கப்பட்ட மதிப்பீடு அல்லது செலவினங்கள் விண்ணப்பதாரரின் சொந்த செலவில் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். பற்றுச்சீட்டு விநியோகம் செய்த நாளிலிருந்து 12 மாதங்கள் வரையில் செல்லுபடியாகும்.
இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்: இத்திட்டத்தில் ஆண்டு தோறும் தொழில் மற்றும் வணிக துறையின் இணையதளம் www.indcom.tn.gov.in மூலம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.
இந்த விண்ணப்பங்களை தொழில்நுட்பக் குழு ஆய்வு செய்து, வழிகாட்டுதல் குழுவின் மூலம் தேர்வு செய்யப்படும். குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களைச் சேர்ந்தோர் இத்திட்டம் மூலமாக பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போதைப் பொருள்களுக்கு இளைஞா்கள் இரையாக வேண்டாம்: டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால் அறிவுரை

அயோத்தியா ராமா் கோயில் நன்கொடை வழக்கு: எஸ்ஐடி விசாரணையின் நம்பகத்தன்மை குறித்து கேஜரிவால் கேள்வி

55,000 போதை மாத்திரைகள் பறிமுதல்: 3 போ் கைது

உயா் சுகாதாரத்துடன் சாலையோர உணவகங்கள்; ஊழியா்களுக்கு தடுப்பூசி: அரசு புதிய திட்டம்
விடியோக்கள்

நயினார் நாகேந்திரன் காமெடிதான் பேசுவார்! செங்கோட்டையன் விமர்சனம் | TVK | BJP

கோல் கீப்பர் வோசின்ஹாவின் கதை: ஓர் இரவு... எல்லாம் மாறியது! | Vozinha |

எலும்பு முறிவு, நரம்பு நோய்கள் தீர்க்கும் திருமாகறலீஸ்வரர் திருக்கோயில்!


