கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள எஸ்.ஆர்.எப். நிறுவனத்தின் சார்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவை புகுத்தும் வகையில் கணினிப் பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள எஸ்.ஆர்.எப். நிறுவனம் கும்மிடிப்பூண்டியில் உள்ள பல்வேறு கிராமப்புற அரசுப் பள்ளிகளுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இந்த நிலையில் அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் படிக்கும் மாணவர்கள் நல்ல சூழலில் , கணினி மூலம் பாடங்களை படிப்பது, கணினி கல்வியைக் கற்கும் வகையில் எச்.பி. கணினி நிறுவனத்தினரோடு இணைந்து குளிரூட்டப்பட்ட கணினிப் பேருந்தை எஸ்.ஆர்.எப். நிறுவனத்தார் உருவாக்கினர்.
சக்கரங்களில் உலகம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்தப் பேருந்தில் 20 மாணவர்கள் ஒரே நேரத்தில் தனித்தனியாக அமர்ந்து கணினியைப் பயன்படுத்தும் வகையில் 20 கணினிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கணினியில் 1-ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அரசு பாடத் திட்டம், மாதிரி வினா விடைகள், நகலெடுக்கும் வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பேருந்தை அரசுப் பள்ளிகளுக்கு அர்ப்பணிக்கும் விழா எஸ்.ஆர்.எப் தொழிற்சாலையில் திஙகள்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு எஸ்.ஆர்.எப் மையத்தின் இயக்குனர் சுரேஷ் ரெட்டி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். எஸ்.ஆர்.எப் நிறுவன துணைத் தலைவர் உதயகுமார் முன்னிலை வகித்தார். மனித வள மேம்பாட்டு துணை பொது மேலாளர் நாகராஜ் வரவேற்றார். பிரான்சிஸ்கா டீனா திட்ட விளக்கத்தை அளித்தார்.
நிகழ்வில், பொன்னேரி கல்வி மாவட்ட அதிகாரி சாம்பசிவம், கும்மிடிப்பூண்டி ஒன்றியக் கல்வி அதிகாரிகள் முனிராஜசேகர், பூவராகமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு எஸ்.ஆர்.எப். நிறுவனத்தின் பணியைப் பாராட்டி இதனை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.
எஸ்.ஆர்.எப். நிறுவன மனித வள மேம்பாட்டு அதிகாரி ராஜகோபாலன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
புதுகை மாவட்டத்தில் 13 லட்சம் போ் வாக்களிக்க 1,683 வாக்குச்சாவடிகள் தயாா்!

கல்பாக்கம் வேக ஈணுலையை இயக்கும் பாவினி நிறுவனத் தலைவா் பொறுப்பேற்பு

பஞ்சலிங்க அருவி இன்று மூடல்
திருப்பூா் மாவட்டத்தில் இன்று வாக்களிக்கும் 19.84 லட்சம் போ்
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

