கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

அரசுப் பள்ளிகளுக்கு கணினிப் பேருந்து அறிமுகம்

கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள எஸ்.ஆர்.எப். நிறுவனத்தின் சார்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கணினி

News image

கும்மிடிப்பூண்டி எஸ்.ஆர்.எப்  நிறுவனம்  மூலம்  அரசுப்  பள்ளி மாணவர்களுக்கு  கணினிப் பேருந்து  வசதியைத் தொடங்கி வைத்த அந்த  நிறுவன  இயக்குனர்  சுரேஷ்  ரெட்டி.

Updated On :22 அக்டோபர் 2018, 10:45 pm


கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள எஸ்.ஆர்.எப். நிறுவனத்தின் சார்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவை புகுத்தும் வகையில் கணினிப் பேருந்து அறிமுகப்படுத்தப்பட்டு தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள எஸ்.ஆர்.எப். நிறுவனம் கும்மிடிப்பூண்டியில் உள்ள பல்வேறு கிராமப்புற அரசுப் பள்ளிகளுக்கு பல்வேறு சேவைகளை செய்து வருகிறது. இந்த நிலையில் அரசு தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆகியவற்றில் படிக்கும் மாணவர்கள் நல்ல சூழலில் , கணினி மூலம் பாடங்களை படிப்பது, கணினி கல்வியைக் கற்கும் வகையில் எச்.பி. கணினி நிறுவனத்தினரோடு இணைந்து குளிரூட்டப்பட்ட கணினிப் பேருந்தை எஸ்.ஆர்.எப். நிறுவனத்தார் உருவாக்கினர். 
சக்கரங்களில் உலகம் என்ற பெயரில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்தப் பேருந்தில் 20 மாணவர்கள் ஒரே நேரத்தில் தனித்தனியாக அமர்ந்து கணினியைப் பயன்படுத்தும் வகையில் 20 கணினிகள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கணினியில் 1-ஆம் வகுப்பு முதல் 12 வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான அரசு பாடத் திட்டம், மாதிரி வினா விடைகள், நகலெடுக்கும் வசதி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் பேருந்தை அரசுப் பள்ளிகளுக்கு அர்ப்பணிக்கும் விழா எஸ்.ஆர்.எப் தொழிற்சாலையில் திஙகள்கிழமை நடைபெற்றது. விழாவிற்கு எஸ்.ஆர்.எப் மையத்தின் இயக்குனர் சுரேஷ் ரெட்டி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். எஸ்.ஆர்.எப் நிறுவன துணைத் தலைவர் உதயகுமார் முன்னிலை வகித்தார். மனித வள மேம்பாட்டு துணை பொது மேலாளர் நாகராஜ் வரவேற்றார். பிரான்சிஸ்கா டீனா திட்ட விளக்கத்தை அளித்தார்.
நிகழ்வில், பொன்னேரி கல்வி மாவட்ட அதிகாரி சாம்பசிவம், கும்மிடிப்பூண்டி ஒன்றியக் கல்வி அதிகாரிகள் முனிராஜசேகர், பூவராகமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு எஸ்.ஆர்.எப். நிறுவனத்தின் பணியைப் பாராட்டி இதனை மாணவர்கள் முழுமையாக பயன்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர்.
எஸ்.ஆர்.எப். நிறுவன மனித வள மேம்பாட்டு அதிகாரி ராஜகோபாலன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.