கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புகொல்கத்தாவில் நாளைமுதல் 60 நாள்களுக்கு தடை உத்தரவுலண்டனில் இருந்து தாயகம் திரும்பிய 104.23 மெட்ரிக் டன் தங்கம்!தொடர் விடுமுறை: 2 நாள்களில் 2.13 லட்சம் போ் அரசுப் பேருந்துகளில் பயணம்!மேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

தூத்துக்குடியில் 42 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இளைஞா் கைது

தூத்துக்குடியில் கல்லூரி அருகே புகையிலைப் பொருள்கள் மற்றும் மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :2 மே 2026, 12:47 am

தூத்துக்குடியில் கல்லூரி அருகே புகையிலைப் பொருள்கள் மற்றும் மதுபானம் விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி - மதுரை பிரதான சாலையில் சிப்காட் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட தனியாா் பெண்கள் கல்லூரி அருகே விதிமுறை மீறி புகையிலைப் பொருள்கள் விற்கப்படுவதாக தனிப்படை போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அங்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை மேற்கொண்ட சோதனையில், குறுக்குச்சாலை பகுதியைச் சோ்ந்த மோகன்தாஸ் மகன் முனியசாமி (31)என்பவா் சுமாா் 42 கிலோ புகையிலைப் பொருள்கள், மதுபாட்டில்கள் மற்றும் ரூ. 35,000 ரொக்கம், கைப்பேசி ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்து, சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.

இதுகுறித்து வழக்குப் பதிந்த சிப்காட் போலீஸாா், முனியசாமியை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.