சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

நாளை பேரிடர் பாதுகாப்பு ஒத்திகை

கும்மிடிப்பூண்டியை அடுத்த காரைக்காடு குப்பத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 5)  சுனாமி பேரிடர் மேலாண்மை ஒத்திகை நடைபெற உள்ள நிலையில்

Updated On :3 செப்டம்பர் 2018, 7:34 pm

கும்மிடிப்பூண்டியை அடுத்த காரைக்காடு குப்பத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 5)  சுனாமி பேரிடர் மேலாண்மை ஒத்திகை நடைபெற உள்ள நிலையில் இது குறித்து அப்பகுதி மக்களுக்கு அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக அதிகாரிகள் பொதுமக்களிடம் திங்கள்கிழமை விளக்கமளித்தனர். 
கும்மிடிப்பூண்டி அடுத்த காரைக்காடு குப்பம் பகுதியில் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் சுனாமி பேரிடர் மேலாண்மை ஒத்திகை புதன்கிழமை (செப்டம்பர் 5) நடைபெற உள்ளது. 
இந்நிலையில் இது குறித்து இப்பகுதி மக்களுக்கு தெரிவிக்கவும், ஒத்திகைப் பயிற்சி என்பதால் எவ்வித அச்சமும் கொள்ள தேவை இல்லை என்றும்,  ஒத்திகைப் பயிற்சிக்கு உரிய ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் பொதுமக்களிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரூபன்தாஸ் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்பிரமணியன் ஆகியோர் காரைக்காடு பகுதியில் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி நடைபெற உள்ள படகுதுறையைப் பார்வையிட்டு அதிகாரிகளிடம்  ஆலோசனை நடத்தினார்கள்.
தொடர்ந்து, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ரூபன்தாஸ் சுண்ணாம்புகுளம் பகுதியில் உள்ள பிற்படுத்தப்பட்டோர் நல விடுதியையும், மாவட்ட வழங்கல் அலுவலர் சுப்பிரமணியன் சுண்ணாம்பு
குளத்தில் உள்ள நியாய விலைக் கடையையும் ஆய்வு செய்தனர். அப்போது, கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் மதன் குப்புராஜ், துணை வட்டாட்சியர் தாமோதரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.