புதுக்கோட்டை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் மறுவாக்குப்பதிவு நடத்தக்கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தமிழகத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதியில் ஒரே கட்டமாக நடந்து முடிந்த நிலையில், மே 4-ல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.
இதனிடையே, புதுக்கோட்டையில் ஆர்.பாலகுறிச்சி, சீகம்பட்டி, ரெகுநாதபட்டி, கோபால் பட்டி, வைரவன்பட்டி, விடத்தலான்பட்டி ஆகிய 6 கிராமங்களையும் திருப்பத்தூர் தொகுதியுடன் சேர்க்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.
இதனைத் தொடர்ந்து, திருப்பத்தூர் தொகுதிக்கு உட்பட்ட 6 கிராமங்களைச் சேர்ந்த 2,012 பேர் வாக்களிக்கவில்லை எனவும், 3 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்த வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் லட்சுமணன் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், தேர்தல் முடிந்த பிறகு எப்படி வாக்களிக்க அனுமதிக்க முடியும் என கேள்வியெழுப்பிய நீதிபதி அமர்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Summary
TN Polls 2026: Petition seeking re-polling in Tirupattur dismissed
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தல்
குண்டர் தடுப்புச் சட்ட ரத்து வழக்கு! உயர் நீதிமன்றத்தில் காத்திருக்கும் முன்னாள் காவல் ஆணையர் அருண்!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்!

திருப்பத்தூரில் ஒரு வாக்கு வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் வெற்றி பெற்றதை எதிர்த்து வழக்கு: நாளை மீண்டும் விசாரணை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |




