மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பூண்டி ஏரியில் செத்து மிதந்த மீன்கள் அகற்றம்

பூண்டி ஏரியில் செத்து மிதந்து துர்நாற்றம் ஏற்படுத்திய மீன்களை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறையினர் திங்கள் கிழமை ஈடுபட்டனர்.  

Updated On :3 செப்டம்பர் 2018, 7:34 pm

பூண்டி ஏரியில் செத்து மிதந்து துர்நாற்றம் ஏற்படுத்திய மீன்களை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறையினர் திங்கள் கிழமை ஈடுபட்டனர்.  
திருவள்ளூர் அருகே பூண்டி ஏரியில் தண்ணீர் இருப்பு 13 மில்லியன் கன அடியாக குறைந்து கொண்டே வருகிறது. இதனால், சேறும் சகதியுமாக இருப்பதால் மீன்களின் செவுளுக்குள் சேறு புகுந்து சுவாசிக்க முடியாத நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஏரி முழுவதும் மீன்கள் செத்து மிதந்தன. இந்நிலையில், பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த சுற்றுலாப் பயணிகள் துர்நாற்றத்தால் மிகவும் அவதியடைந்தனர்.
இதையடுத்து, ஏரியில் மிதக்கும் மீன்களை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வகையில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் உத்தரவின் பேரில் தொழிலாளர்கள் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். திங்கள்கிழமை மட்டும் ஏரியில் இருந்து மொத்தம் 1,500 கிலோ மீன்கள் அகற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.