மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு விநாயகர் சிலை வழங்கிக் கொண்டாட்டம்
சேவாலயாவில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்தவர்களுக்கு விநாயகர் சிலைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
சேவாலயாவில், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்தவர்களுக்கு விநாயகர் சிலைகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
திருவள்ளூரை அடுத்த கசுவா கிராமத்தில் சேவாலயா வளாகத்தில் உள்ள பாரதியார் மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகள் ஒவ்வொரு விழாக்களையும் அறிந்து கொள்ளும் நோக்கத்தில் ஆண்டு தோறும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அந்த வகையில் விநாயகர் சதுர்த்தி விழா அப்பள்ளி வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சேவாலயா நிறுவனர் முரளிதரன் தலைமை வகித்தார். புலியூர் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவர் கார்த்தியாயினி, சேவாலயா மருத்துவர் சாதனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், திருவள்ளூர் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் கிருஷ்ணராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அதைத் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்ற மகளிருக்கு விநாயகர் சிலைகள் வழங்கப்பட்டன.
நிகழ்வில், மாணவ, மாணவிகள் மற்றும் கிராம மக்கள் ஆகியோருக்கு கொழுக்கட்டை, சுண்டல், சர்க்கரைப் பொங்கல் ஆகிய பிரசாதங்கள் விநியோகம் செய்யப்பட்டன. இதில், சேவாலயா அறக்கட்டளை நிர்வாகி அன்னபூர்ணா, பாரதியார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கிங்ஸ்டன், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஆனந்தன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





