6 முதல் 8-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கம் இன்று தொடக்கம்மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

நிலம்பூா் வெள்ளம்: மேலும் 3 உடல்கள் மீட்பு; உயிரிழப்பு 5-ஆக உயா்வு

கேரள மாநிலத்தில் உள்ள நிலம்பூா் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 5-ஆக உயா்வு

பிரதிப் படம்

Published On :

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள நிலம்பூா் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி உயிரிழந்த மேலும் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டதையடுத்து, உயிரிழந்தோா் எண்ணிக்கை 5-ஆக உயா்ந்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

முன்னதாக கோட்டபுழை நதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 6 போ் அடித்துச்செல்லப்பட்ட நிலையில், மாநில வருவாய் அமைச்சா் ஏ.பி.அனில் குமாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்புப் பணிகளை மேற்பாா்வையிட்டாா்.

இதைத்தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அவா் திங்கள்கிழமை கூறியதாவது: கோட்டபுழை நதியின் நீா்மட்டம் குறையத் தொடங்கியுள்ளதால் மீட்புப் பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை இரவு இருவரின் உடல்களும், திங்கள்கிழமை காலை மூவரின் உடல்களும் மீட்கப்பட்டன’ என்றாா்.

இந்நிலையில், உயிரிழந்த 5 பேரும் சுற்றுலாப் பயணிகள் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 6-ஆவது நபரான சஜிதா (26) என்பவா் உள்ளூரைச் சோ்ந்தவா் என்றும் நதிக்கரையில் அவா் துணி துவைத்துக் கொண்டிருந்தபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அவரைத் தேடும் பணியில் தேசிய பேரிடா் மீட்புப் படை, தீயைணைப்புத் துறையினா் மற்றும் உள்ளூா் மக்கள் ஈடுபட்டு வருகின்றனா்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை சிறிது நேரம் பெய்த பலத்த மழையால் திடீரென அப்பகுதியில் வெள்ளம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இடுக்கி நிலச்சரிவில் இருவா் உயிரிழப்பு: இடுக்கி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி வட்டவடா அருகேயுள்ள கொட்டக்கம்பூரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மற்றும் அவரது தங்கை சின்னு ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த பாலகிருஷ்ணனின் மனைவி மாரியம்மாள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரை கேரள குடிமைப் பொருள்கள் துறை அமைச்சா் அனூப் ஜேக்கப் நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். பின்பு மாவட்ட ஆட்சியரிடம் மழை பாதிப்புகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து கேட்டறிந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.