4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ஆரம்ப சுகாதார நிலையத்தை மாற்ற எதிர்ப்பு:  பொதுமக்கள் சாலை மறியல்

திருவாலங்காடு அருகே இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On :23 ஜனவரி 2019, 6:16 am IST

திருவாலங்காடு அருகே இருந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை வேறு இடத்துக்கு மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 திருவாலங்காடு ஒன்றிய அலுவலகம் அருகில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இதை மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையமாக தரம் உயர்த்தி, 30 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்படவுள்ளன. இதற்காக, அரசு ரூ. 1.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
 தற்போது இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய இடவசதி இல்லை எனக் கூறி, திருவாலங்காட்டில் இருந்து, 3 கி.மீ. தொலைவில் உள்ள கூடல்வாடி கிராமம் அருகே, 2 ஏக்கர் நிலத்தில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுவதற்கு பொதுப் பணித்துறையினர் முடிவு செய்தனர். தொடர்ந்து, கட்டடம் கட்டுவதற்கு மண் பரிசோதனை செய்து, தயார் நிலையில் இருந்தனர். இதற்கான முதல் கட்ட நிதியாக, ரூ. 63 லட்சம் அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து தகவல் அறிந்த, திருவாலங்காடு கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருவாலங்காடு ஒன்றிய அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூறுகையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 15-ஆம் தேதி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தை இடமாற்றம் செய்யக்கூடாது, அதே இடத்தில் விரிவுபடுத்த வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அதை மீறி, கூடல்வாடியில் மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் கட்டக்கூடாது என்றார் அவர். 
 தகவல் அறிந்து வந்த திருவாலங்காடு காவல் ஆய்வாளர் ருக்மாங்கதன், வருவாய் ஆய்வாளர் மணிகண்டன், கிராம நிர்வாக அலுவலர் அனந்தநாராயணன் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
பின்னர், கோரிக்கையை அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வதாக அதிகாரிகள் உறுதி அளித்த பின், பொதுமக்கள் கலைந்து சென்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.