கும்மிடிப்பூண்டியை அடுத்த பெருவாயல் டிஜேஎஸ் பொறியியல் கல்லூரியின் இயந்திர பொறியியல் துறை சார்பில் தொழில்நுட்பப் பயிற்சி பட்டறை புதன்கிழமை நடைபெற்றது.
சென்னையைச் சேர்ந்த விஸ்மெக் நிறுவனத்துடன் இணைந்து பொறியியல் மாணவர்களுக்கான "மாஸ்டர் கேம்' என்ற நவீன இயந்திர வடிவமைப்பு தொழில்நுட்பம் குறித்த பயிற்சி பட்டறை கல்லூரி வளாகத்தில் நடத்தப்பட்டது.
பயிற்சி பட்டறையைத் தொடங்கி வைத்த டிஜேஎஸ் கல்விக் குழுமத் தலைவர் டி.ஜே.கோவிந்தராஜன் பேசியது:
நவீன தொழில்நுட்பங்களை உடனுக்குடன் மாணவர்கள் கற்றறிவதன் மூலம் அவர்களின் வேலைவாய்ப்புத் திறன் அதிகரிப்பதோடு, அவர்களின் சிந்தனைத் திறனை தூண்டுகிறது, இக்கால மாணவர்களின் முன்னேற்றத்துக்கு கவனச் சிதறலே தடையாக உள்ளது
என்றார் அவர்.
நிகழ்வில் விஸ்மெக் நிறுவனத்தின் பயன்பாட்டு பொறியாளர் விக்னேஷ் பிரசாந்த், தொழில் முன்னேற்றப் பொறியாளர் செல்வமூர்த்தி, கல்லூரி முதல்வர் பழனி, இயந்திர பொறியியல் துறைத் தலைவர் ஜெயவீரன், பேராசிரியர் ஆர். ரவிக்குமார், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







