கும்மிடிப்பூண்டியில் அனைத்து ஊராட்சிகளிலும் திமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் இரண்டாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டியில் அனைத்து ஊராட்சிகளிலும் திருவள்ளூர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கி.வேணு உத்தரவின் பேரில் மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியின் 2ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயலாளர் கி.வேணு தலைமையில் கருணாநிதி திருவுருவ படத்திற்கு திமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். நிகழ்வில் மாவட்ட அவை தலைவர் பகலவன், ஒன்றிய துணை செயலாளர் திருமலை,கிழ்முதலம்பேடு ஊராட்சி தலைவர் கே.ஜி.நமச்சிவாயம், தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சரண்ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளரும் தலைமை செயற்குழு உறுப்பினருமான டி.ஜெ.கோவிந்தராஜன் தலைமையில் கருணாநிதி திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் தூய்மை பணியாளர்களுக்கு அரிசி, ஊக்கத்தொகை ஆகியவை வழங்கப்பட்டன. நிகழ்வில் தொழிலதிபர் டி.ஜெ.தேசமுத்து, ஒன்றிய கவுன்சிலர் வெற்றி ராஜேஷ், தினேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கும்மிடிப்பூண்டி ரெட்டம்பேடு சாலையில் நகர திமுக நிர்வாகிககள் கருணாகரன், கே.என்.பாஸ்கர், வெங்கடேசன், இஸ்மாயில், குமார் உள்ளிட்டோர் முன்னிலையில் திமுகவினர் கருணாநிதி திருவுருவ படத்திற்கு மரியாதை செலுத்தி ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கினர்.
கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் மு.மணிபாலன் தலைமையில் திமுகவினர் கருணநிதி உருவ படத்திற்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு கிருமிநாசினி, முகக்கவசங்கள் வழங்கப்பட்டது.
பெரிய ஓபுளாபுரத்தில் கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய அவை தலைவர் வேதாச்சலம் தலைமையிலும், ஊராட்சி துணை செயலாளரும் பெரிய ஓபுளாபுரம் ஊராட்சி வார்டு உறுப்பினருமான ராஜா ஏற்பாட்டில் எளாவூர் பஜாரில் திமுவினர் கருணாநிதி படத்திற்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வில் திமுக நிர்வாகிகள் சத்யா, மாரிமுத்து பங்கேற்றனர்.
மாநெல்லூரில் ஊராட்சி திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் பா.செ.குணசேகரன் தலைமையிலும், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி குணசேகரன், ஒன்றிய துணை செயலாளர் ஏசுமுத்து, வேலு, அபுபக்கர் முன்னிலையில் கருணாநிதி திருவுருவ படத்திற்கு திமுகவினர் மரியாதை செலுத்தி அன்னதானம் வழங்கினர்.
மாதர்பாக்கத்தில் ஊராட்சி தலைவர் சீனிவாசன் தலைமையிலும், நேமள்ளூரில் மாவட்ட இலக்கிய அணி நிர்வாகி மனோகரன் தலைமையிலும், பூவலம்பேட்டில் முன்னாள் ஒன்றிய பொருப்பாளர் வெங்கடாசலபதி தலைமையிலும், எஸ்.ஆர்.கண்டிகையில் ஒன்றிய கவுன்சிலர் ஜெயசந்திரன் தலைமையிலும், பாதிரிவேட்டில் ஒன்றிய கவுன்சிலர் சிட்டிபாபு தலைமையிலும், ரெட்டம்பேட்டில் ஊராட்சி செயலாளர் செந்தில்குமார் தலைமையிலும் திமுகவினர் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவு நாளை அனுசரித்தனர்.