காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

அஸ்ஸாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்!

அஸ்ஸாமில் வரும் பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதைத்தொடர்ந்து அமைச்சர் நந்திதா பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.

Assam minister Nandita Garlosa joins Congress

அமைச்சர் நந்திதா - Photo credit: Jitendra Singh Alwar 'X' Page.

Published On :

அஸ்ஸாமில் வரும் பேரவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதைத்தொடர்ந்து அமைச்சர் நந்திதா பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார்.

அஸ்ஸாம் மாநில விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் அமைச்சர் நந்திதா கார்லோசா. இவர் 2021 பேரவைத் தேர்தலில் ஹாஃப்லாங் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார்.

இந்த நிலையில் அவருக்கு நடைபெறவிருக்கும் பேரவைத் தேர்தலில் போட்டியிட பாஜக சார்பில் சீட் வழங்கப்படவில்லை. இந்த முறை ஹாஃப்லாங் தொகுதியில் அவருக்குப் பதிலாக புதிய முகமான ரூபாலி லாங்தாசாவை வேட்பாளராக பாஜக களமிறக்கியுள்ளது.

இதனால் அதிருப்தியடைந்த அவர் பாஜகவிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் ஞாயிற்றுக்கிழமை இணைந்தார். அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் ஊடகக் குழு, நந்திதா கார்லோசா ஹாஃப்லாங்கில் கட்சியில் இணைந்த புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளது.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, நந்திதாவின் இல்லத்திற்குச் சென்று அவரைச் சந்தித்துப் பேசினார். ஆனால், இந்த சந்திப்பின் முடிவு குறித்து இருவரும் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. 126 உறுப்பினர்களைக் கொண்ட அஸ்ஸாம் சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறுகிறது.

தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அமைச்சர் ஒருவர் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்திருப்பது ஆளும் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

Summary

Assam minister Nandita Garlosa joined the Congress on Sunday after being denied a BJP ticket for the upcoming assembly polls in the northeastern state.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.