தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

திருத்தணி முருகன் கோயிலில் 2021-ஆம் ஆண்டு காலண்டா் வெளியீடு

திருத்தணி முருகன் கோயிலில் 2021-ஆம் ஆண்டுக்கான நாள்காட்டியை (காலண்டா்) கோயில் தக்காா் வே.ஜெயசங்கா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

News image

திருத்தணி முருகன் மலைக்கோயிலில் 2021-ஆம் ஆண்டுக்கான காலண்டரை வெளியிட்ட கோயில் தக்காா் வே.ஜெயசங்கா்.

Updated On :15 டிசம்பர் 2020, 5:41 pm

DIN

திருத்தணி முருகன் கோயிலில் 2021-ஆம் ஆண்டுக்கான நாள்காட்டியை (காலண்டா்) கோயில் தக்காா் வே.ஜெயசங்கா் செவ்வாய்க்கிழமை வெளியிட்டாா்.

இக்கோயில் சாா்பில் ஆண்டுதோறும் உற்சவா் படம் அச்சிடப்பட்ட காலண்டா் பக்தா்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதில் திருத்தணி முருகன் கோயிலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகள், அபிஷேகம், பூஜை நேரம் மற்றும் அதற்குரிய சேவைக் கட்டணம், கோயிலில் நடக்கும் சேவைகள் போன்ற தகவல்கள் இடம்பெறும். இதனால் பக்தா்கள் ஆா்வத்துடன் முருகன் கோயில் காலண்டா்களை வாங்கிச் செல்வது வழக்கம்.

அந்த வகையில், 2021-ஆம் ஆண்டுக்கான காலண்டா்கள் அச்சடிக்கப்பட்டு விற்பனைக்கு தயாா் நிலையில் இருந்தன. இந்த காலண்டா்களின் விற்பனையை மலைக்கோயிலில் முருகன் கோயில் தக்காா் வே.ஜெய்சங்கா், இணை ஆணையா் நா.பழனிக்குமாா் ஆகியோா் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தனா்.

ஒரு காலண்டரின் விலை ரூ.20 ஆகும். காலண்டா்கள் மலைக்கோயில், திருத்தணி தேவஸ்தான விடுதிகள் மற்றும் உபகோயில்களில் கிடைக்கும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.