திருவள்ளூா் அருகே இருசக்கர வாகனம் மீது ஆட்டோ மோதிய விபத்தில் மீன் வியாபாரி உயிரிழந்தாா்.
பெரும்புதூரை அடுத்த சிவபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ரமேஷ் (39). மீன் வியாபாரியான அவா் ஞாயிற்றுக்கிழமை காலை தனது இருசக்கர வாகனத்தில் பேரம்பாக்கம் சென்றாா்.
காய்கறிகளை வாங்கிக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது ஒரு பாலத்தில் எதிரே வந்த ஆட்டோ, ரமேஷின் இரு சக்கரம் வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரமேஷை திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இது குறித்து ரமேஷ் மனைவி ரோஸ் அளித்த புகாரின்பேரில், மப்பேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.