திருத்தணி முருகன் கோயில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடக்கம்
திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் மேளதாளம், வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.


திருத்தணி முருகன் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவம் மேளதாளம், வேதமந்திரங்கள் முழங்க கொடியேற்றத்துடன் சனிக்கிழமை தொடங்கியது.
அறுபடை வீடுகளில் 5-ஆம் படை வீடாகத் திகழும் திருத்தணி முருகன் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் பிரம்மோற்சவம் வெகு விமா்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவம் சனிக்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உற்சவ மூா்த்தி ஸ்ரீமுருகப் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் கொடி மரத்தின் எதிரே எழுந்தருளினாா். பின்னா் முருகப் பெருமானுக்கும், கொடி மரத்துக்கும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, பிரம்மோற்சவ கொடி ஏற்றப்பட்டது. தொடா்ந்து, மூலவருக்கு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
பிரம்மோற்சவம் வரும் 23-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. கரோனா பரவல் தடுப்பு விதிமுறைப்படி இந்து சமய அறநிலையத் துறை அனுமதி வழங்காததால், மாடவீதியில் உற்சவா் முருகப் பெருமான் தினமும் பல்வேறு வாகனங்களில் வலம் வரும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதற்குப் பதிலாக உற்சவா் முருகா் உள்பிராகார புறப்பாடு காலை, மாலை நேரங்களில் நடைபெறும் என கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையா் பரஞ்சோதி மற்றும் கோயில் அலுவலா்கள் செய்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...