ஊத்துக்கோட்டை: வயதான தம்பதியை தாக்கி நகை, பணம் கொள்ளை
ஊத்துக்கோட்டை அருகே வயதான தம்பதியை தாக்கி தாலி சங்கிலி, பணம் பறிக்கப்பட்ட நிலையில், 3 பேர் கொண்ட கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

கொள்ளையர்களால் தாக்கப்பட்ட வயதான தம்பதி

கொள்ளையர்களால் தாக்கப்பட்ட வயதான தம்பதி
ஊத்துக்கோட்டை அருகே வயதான தம்பதியை தாக்கி தாலி சங்கிலி, பணம் பறிக்கப்பட்ட நிலையில், 3 பேர் கொண்ட கொள்ளை கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அடுத்த ஆரணி மங்களம் கிராமத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற நியாய விலை கடை ஊழியர் ஜடராயன் (62). இவரது மனைவி சுலோச்சனா (58) அங்கன்வாடி ஊழியராக பணியாற்றி வருகிறார்.
நேற்றிரவு வயதான தம்பதியர் இருவரும் வீட்டில் தரை தளத்தில் தூங்கியுள்ளனர். இவர்களது மகளும், மருமகனும் மேல் தளத்தில் தூங்கி கொண்டிருந்தனர்.
நள்ளிரவு ஜடராயன் வெளியே பார்த்த போது வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் பீரோவை உடைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுவது தெரிந்து அங்கு சென்றதும் முதியவரை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.

இவரின் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த அவரின் மனைவி சுலோச்சனாவையும் தாக்கிவிட்டு அவரது கழுத்தில் இருந்த தாலி சங்கிலி 4.5 சவரனை பறித்துள்ளனர்.
முதியவர்களின் அலறல் சத்தம் கேட்டு மேல் தளத்தில் இருந்தவர்கள் வருவதை பார்த்த மர்ம கும்பல் 4.5 சவரன் தாலி சங்கிலி, பீரோவில் இருந்த 22 ஆயிரம் ரொக்கம் பணத்தை எடுத்து கொண்டு தப்பி சென்றது.

இதுகுறித்து அளிக்கப்பட தகவலின் பேரில் ஆரணி போலீசார் சம்பவ இடத்திற்கு விசாரணையில் ஈடுபட்டனர். மோப்ப நாய் உதவியுடன் தடயங்களை சேகரித்து வீடு புகுந்து முதியவர்களை தாக்கி கைவரிசை காட்டிய 3 பேர் கொண்ட கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...