மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸின் பேரவைத் தேர்தல் வாக்குறுதிகளை முதல்வர் மமதா பானர்ஜி வெளியிட்டுள்ளார்.
மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, தேர்தலுக்கான வாக்குறுதிகளை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் வெளியிட்டுள்ளனர்.
திரிணமூல் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதிகளாக,
பெண்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,500; பட்டியலினத்தோருக்கு மாதம் ரூ. 1,700 வழங்கப்படும்.
வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,500 நிதியுதவி.
விவசாயிகளுக்கு உதவும் விதமாகவும், நிலமற்ற விவசாயிகளுக்கு ஆதரவளிக்கவும், வேளாண் துறையை மேம்படுத்தும் வகையில் வேளாண் துறைக்கான பட்ஜெட்டை ரூ. 30,000 கோடிக்கு உயர்த்தப்படும்.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு தனி வீடு இருப்பது உறுதி செய்யப்படும்.
ஒவ்வொரு வீட்டுக்கும் குழாய் மூலம் குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்படும்.
ஒவ்வொரு வட்டாரம் மற்றும் நகரத்திலும் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு, வீட்டு வாசலில் பயனுள்ள சுகாதார சேவை வழங்கப்படும்.
அனைத்து அரசுப் பள்ளிகளிலும் முழுமையான கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படும்.
உலகத் தரம்வாய்ந்த தளவாடங்கள், துறைமுகங்கள், வர்த்தக உள்கட்டமைப்பு, அதிநவீன வர்த்தக மையத்துடன் கிழக்கிந்திய வர்த்தகத்தின் நுழைவாயிலாக மேற்கு வங்கத்தை மாற்றும்வகையில் பணியாற்றுவேன்.
தற்போது பயனடைந்து வரும் அனைத்து பயனாளிகளுக்கும் தடையில்லா முதியோர் ஓய்வூதிய ஆதரவை உறுதி செய்வதுடன், தகுதிவாய்ந்த அனைத்து மூத்த குடிமக்களுக்கும் படிப்படியாக திட்டம் விரிவுபடுத்தப்படும்.
7 புதிய மாவட்டங்களும், மறுசீரமைப்பு மூலம் நகராட்சி உள்ளாட்சி அமைப்புகளின் எண்ணிக்கையும் விரிவுபடுத்தப்படும்.
மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29 ஆகிய இரு தேதிகளில் இரு கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. தொடர்ந்து, மே 4 ஆம் தேதியில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.
மேற்கு வங்கத்தில், திரிணமூல் காங்கிரஸ் நான்காவது முறையாக ஆட்சி செய்து வரும்நிலையில், வரும் தேர்தலில் வென்றால், 5-வது முறையாக மீண்டும் ஆட்சியமைக்கும்.
Summary
Trinamool Congress releases poll manifesto
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மேற்கு வங்கத்தில் மமதா பானர்ஜி உருவாக்கிய சிலையை அகற்றிய பாஜக அரசு!

100க்கும் அதிகமான இடங்களில் பாஜக கொள்ளை : மமதா பானர்ஜி குற்றச்சாட்டு

மேற்கு வங்கத்தில் வாக்கு எண்ணும் முகவர்களுடன் திரிணமூல் காங்கிரஸ் சந்திப்பு!

மசாலா பொரியும் மீனும் பாஜக - திரிணமூல் பிரசாரத்தின் அங்கம்: மமதா பானர்ஜி
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



