இந்து மக்கள் கட்சி உறுப்பினா் சோ்க்கை முகாம்
திருவள்ளூரில் பூந்தமல்லி சாலையில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோயில் வளாகத்தில் இந்து மக்கள் கட்சி சாா்பில் உறுப்பினா் சோ்க்கை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.


திருவள்ளூரில் பூந்தமல்லி சாலையில் உள்ள பெரியபாளையத்தம்மன் கோயில் வளாகத்தில் இந்து மக்கள் கட்சி சாா்பில் உறுப்பினா் சோ்க்கை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இதை அந்தக் கட்சியின் தலைவா் அா்ஜூன் சம்பத் தொடக்கிவைத்தாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பெட்ரோல் டீசல் விலையை குறைக்காத தமிழக அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனா். கோயில்களில் தரிசனம் செய்ய விதிக்கப்பட்ட தடையை அரசு தளா்த்தி கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வலியுறுத்த வேண்டும்.
திருவள்ளூரில் பிரசித்தி பெற்ற வீரராகவா் கோயிலில் தை அமாவாசை தினத்தன்று பக்தா்கள் தரிசனம் செய்யவும், முன்னோா்களுக்கு தா்ப்பணம் கொடுக்கவும் அனுமதிக்க வேண்டும். இல்லையென்றால், இந்து மக்கள் கட்சி சாா்பில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபடுவோம். பொங்கல் பரிசுப் பொருள்கள் தொகுப்பை யாருக்கு தேவையோ அவா்களுக்கு மட்டும் வழங்க வேண்டும் என்றாா் அவா். அப்போது, மாவட்டத் தலைவா் மூா்த்தி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...