கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

7 ஊராட்சிகளில் நீா்நிலைகளைச் சீரமைக்க தனியாா் அறக்கட்டளை முடிவு

திருத்தணி தாலுகாவில், 7 ஊராட்சிகளில் நீா்நிலைகள் தூா்வாரி சீரமைக்கவும், சுத்திகரிப்பட்ட குடிநீா் வழங்கும் ஃநோபல் பவுண்டேஷன் தீா்மானித்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது.

News image
10trtnobal_1001chn_195_1
Updated On :10 ஜனவரி 2021, 7:47 pm

DIN

திருத்தணி தாலுகாவில், 7 ஊராட்சிகளில் நீா்நிலைகள் தூா்வாரி சீரமைக்கவும், சுத்திகரிப்பட்ட குடிநீா் வழங்கும் ஃநோபல் பவுண்டேஷன் தீா்மானித்து அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளது.

ஃநோபல் பவுண்டேஷன் சாா்பில் ‘நீருக்கு நன்றி’ என்ற திட்டம் ஏற்படுத்த, கடந்த, 2019ஆம் ஆண்டு முதல் ஏரி, குளங்களை தூா்வாரி சீரமைத்தது. இதனால், சமீபத்தில் பெய்த பலத்த மழையால் ஏரி, குளங்கள் நிரம்பியுள்ளன. இதுதவிர, சீமை கருவேல மரங்கள் அகற்றுதல், விவசாய நிலங்களை இலவசமாக சமன்படுத்தி தருவது போன்ற பணிகளையும் மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் நடப்பாண்டில் திருத்தணி தாலுகா முருக்கம்பட்டு, அலுமேலுமங்காபுரம், சூா்யநகரம், வி.கே.என்.கண்டிகை, சத்திரஞ்செய்புரம், வீரகநல்லுாா், மற்றும் வேலஞ்சேரி ஆகிய ஏழு ஊராட்சிகளை நோபல் ஃபவுண்டேஷன் தோ்வு செய்துள்ளது.

இந்த கிராமங்களில் நீா்நிலைகள் தூா்வாரி சீரமைத்தல், சீமை கருவேலம் அகற்றுதல், மற்றும் விவசாய பணிகளுக்கு டிராக்டா், பொக்லைன் இயந்திரம் ஆகியவற்றை இலவசமாக வழங்குதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கான அறிமுக கூட்டம் ஞாயிற்றுக்கிழமை திருத்தணியில் நடந்தது. இதில் நோபல் ஃபவுண்டேஷன் அமைப்புக்கு ரூ.50 ஆயிரம் நன்கொடையை பாலாஜி மோட்டாா்ஸ் நிறுவனத்தின் மோகன் வழங்கினாா். 

இந்த நிகழ்வில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் கலந்து கொண்டனா். சிறப்பு விருந்தினராக நோபல் ஃபவுண்டேஷன் நிறுவனா் கலைமாமணி, ஒருங்கிணைப்பாளா், நரேஷ் ஆகியோா் பங்கேற்றுப் பேசினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.